ஆசியக் கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்ட ஐந்து நட்சத்திர வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது, இந்த தொடரில் எதிர்பார்த்த அணியும் இறுதி சுற்றுக்கு வரவில்லை எதிர்பார்த்த வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த தொடர் வித்தியாசமான தொடராகவே இருந்துள்ளது.
அந்த வகையில் இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 நட்சத்திர வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர்.
அப்படிப்பட்ட ஐந்து வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
பாபர் அசாம்.
தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் ஒரு போட்டியில் கூட சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இவர் சிறப்பாக செயல்படாததன் காரணமாகத்தான் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது என்றே கூறலாம்.அந்த அளவிற்கு இவர் இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.