ஆட்டத்துல நாங்களும் இருக்கோம்... ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; முகமது நபி கேப்டன் !! 1

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடரானது, இலங்கையில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஐக்கிய அரபு எமிரகத்திற்கு மாற்றப்பட்டது.

ஆட்டத்துல நாங்களும் இருக்கோம்... ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; முகமது நபி கேப்டன் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்த அணியின் சீனியர் வீரரான முகமது நபி வழிநடத்த உள்ளார். 17 பேர் கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணியில் அஃப்சர் ஜாசி, நஜிபுல்லாஹ் ஜார்டன், ரசீத் கான் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத சமியுல்லாஹ் சின்வாரிக்கு ஆஃப்கானிஸ்தான் அணி இடம் கொடுத்துள்ளது.

அதே போல் நிஜாத் மசூத், குவைஸ் அஹமத் மற்றும் சராஃபுதீன் அஷ்ரப் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி;

முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லாஹ் ஜார்டன் (துணை கேப்டன்), அஃப்சர் ஜாசாய் (விக்கெட் கீப்பர்), அஸ்மதுல்லாஹ் ஒமர்ஜாய், ஃபரீத் அஹமத் மாலிக், ஃபசல் ஹக் ஃபாரூகி, ஹஸ்மத்துல்லாஹ் ஷாகிதி, ஹசரத்துல்லாஹ் ஜாசாய், இப்ராஹிம் ஜர்டான், கரீம் ஜனத், முஜிபுர் ரஹ்மான், நஜிபுல்லாஹ் ஜர்டன், நவீன் உல் ஹக், நூர் அஹமத், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் (விக்கெட் கீப்ப), ரசீத் கான், சமியுல்லாஹ் சின்வாரி.

ரிசர்வ் வீரர்கள்;

நிஜாத் மசூத், குவைஸ் அஹமத், சராஃபித்தீன் அஸ்ரப்.

 

Leave a comment

Your email address will not be published.