இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் செய்யும் தவறை சூரியகுமார் யாதவ் மட்டுமே காப்பாற்றி விட முடியாது என்று தொட்ட கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் முடிவில் ஹாங்காங் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறின. மற்ற அனைத்து அணிகளும் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் இந்திய அணிதான் வெற்றி பெறும் என்று அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இந்திய அணி தான் எதிர்கொண்ட முதல் போட்டியில் இருந்து அபாரமாக விளையாடி ஆசிய கோப்பையின் ராஜா வளம் வந்து கொண்டிருக்கிறது.பெரிய தொடர்களில் மோசமாக செயல்படும் என்ற அவப்பெயரைப் பெற்ற இந்திய அணி, ரோகித் சர்மா தலைமையில் தற்போது ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலம் அந்த களங்கத்தை போக்கிக் கொண்டு வருகிறது.
என்னதான் இந்தியா அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை குவித்து வந்தாலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் இன்னும் சிக்கலாகவே உள்ளது, குறிப்பாக ஆசிய கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தடுமாற்றத்துடன் விளையாடுகிறார்கள்.
இதில் கே எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஆசியக் கோப்பையில் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலுமே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பலம் குறைந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து கடந்த இரண்டு நாட்களாக விமர்சனம் இல்லாமல் தப்பித்துக் கொண்டு வருகிறார்.
மொத்தமாக சொல்லப்போனால் இந்திய அணி,மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பியுள்ளது என்று கூறலாம் அந்த அளவிற்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணிக்கு தேவையான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தொட்டா கணேஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அதில்,இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மென்கள் செய்யும் தவறை எப்பொழுதும் சூரியகுமார் யாதவோ.. அல்லது மிடிலாடர் பேட்ஸ்மென்களோ சரி செய்து விடுவார்கள் என்று எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது. தற்போது இந்திய அணி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலே இதுதான், இதை எளிதாக இப்படியே விட்டுவிட முடியாது என்று தொட்டா கணேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.