யோசிக்கவே வேணாம்... கே.எல் ராகுல் இல்லைனா இவரை துவக்க வீரராக களமிறக்குங்கள்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

காயத்தால் அவதிப்பட்டு வரும் கே.எல் ராகுல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடாவிட்டால் விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், அடுத்ததாக அக்டோபர் மாதம் துவங்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.

யோசிக்கவே வேணாம்... கே.எல் ராகுல் இல்லைனா இவரை துவக்க வீரராக களமிறக்குங்கள்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

பாகிஸ்தான் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியே, டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியாகவும் இருக்க வாய்ப்புள்ளதால், இந்திய அணியின் தேர்வாளர்கள் அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

யோசிக்கவே வேணாம்... கே.எல் ராகுல் இல்லைனா இவரை துவக்க வீரராக களமிறக்குங்கள்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

தொடர்ச்சியான காயங்களால் அவதிப்பட்டு வரும் கே.எல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவாரா என்பதும், தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலிக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா..? இடம் கிடைத்தால் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்குவார் என்பதும் தற்போது வரை தெளிவாக தெரியாததால், முன்னாள் வீரர்கள் பலர் இது குறித்தான தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், விராட் கோலி குறித்தும் கே.எல் ராகுலுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்தும் பேசிய முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேல், கே.எல் ராகுல் இல்லாவிட்டால் விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யோசிக்கவே வேணாம்... கே.எல் ராகுல் இல்லைனா இவரை துவக்க வீரராக களமிறக்குங்கள்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

இது குறித்து பார்த்தீவ் பட்டேல் பேசுகையில், “டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், விராட் கோலிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் முக்கியமானது தான். தற்போதய இந்திய அணியால் என்ன முடியும்..? சரியான 11 வீரர்கள் நமக்கு கிடைத்துவிட்டார்களா என்பதும் இந்த தொடரின் மூலம் தான் தெரியவரும். காயத்தால் அவதிப்பட்டு வரும் கே.எல் ராகுல் ஆசிய கோப்பை தொடரிலும் விளையாடாவிட்டால் விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும். விராட் கோலியின் திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. பெங்களூர் அணிக்காக பல போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி அதில் சிறப்பாகவும் செயல்பட்டுள்ள விராட் கோலிக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவமும் உள்ளது. எனவே மற்றவர்களை விட விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்குவதே சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *