இந்த டீம வச்சுக்கிட்டு உங்களால் ஒன்னும் செய்ய முடியாது... வெற்றி பாகிஸ்தானிற்கு தான்; முன்னாள் வீரர் கணிப்பு !! 1

ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான ரசீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், அடுத்ததாக அக்டோபர் மாதம் துவங்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.

இந்த டீம வச்சுக்கிட்டு உங்களால் ஒன்னும் செய்ய முடியாது... வெற்றி பாகிஸ்தானிற்கு தான்; முன்னாள் வீரர் கணிப்பு !! 2

பாகிஸ்தான் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியே, டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியாகவும் இருக்க வாய்ப்புள்ளதால், இந்திய அணியின் தேர்வாளர்கள் அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த டீம வச்சுக்கிட்டு உங்களால் ஒன்னும் செய்ய முடியாது... வெற்றி பாகிஸ்தானிற்கு தான்; முன்னாள் வீரர் கணிப்பு !! 3

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மற்ற அனைத்து போட்டிகளையும் விட ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தனமாக இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக காத்திருப்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரசீத் லத்தீப், பாகிஸ்தான் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளார்.

இந்த டீம வச்சுக்கிட்டு உங்களால் ஒன்னும் செய்ய முடியாது... வெற்றி பாகிஸ்தானிற்கு தான்; முன்னாள் வீரர் கணிப்பு !! 4

இது குறித்து ரசீத் லத்தீப் பேசுகையில், “வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால் பாகிஸ்தானின் வியூகம் சிறப்பானதாக தோன்றுகிறது. டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நிகழ்த்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவை நீங்கள் பார்க்கும் போது இந்த வருடம் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் என்ற நிலைமை சீரற்ற சூழ்நிலையை காட்டுகிறது. விராட் கோலியின் நிலை என்ன என்பது தெரியவில்லை. கே.எல் ராகுல் காயத்தால் இரண்டு மாதங்களுக்கு மேல் விளையாடவில்லை. இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்திய அணியால் பலமான ஆடும் லெவனை கட்டமைப்பதே கஷ்டம். கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதும் இது போன்ற பல தவறுகளை செய்ததன் காரணமாகவே இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. இந்த முறையும் அதே தவறுகளை இந்திய அணி மீண்டும் மீண்டும் செய்து வருவதால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *