முன்ன மாதிரி இல்ல... ரோஹித் சர்மா முகத்துல இப்ப எல்லாம் ரொம்ப பயம் தெரியும்; தேவை இல்லாமல் பேசிய முன்னாள் வீரர் !! 1

ரோகித் சர்மா பதற்றம் மற்றும் தடுமாற்றத்துடன் காணப்படுகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஷ் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து இந்திய அணியை திறம்பட வழி நடத்தி வரும் ஹிட்மேன் ரோஹித் சர்மா, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக வழி நடத்தி இந்திய அணிக்கு தொடர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார்.முன்ன மாதிரி இல்ல... ரோஹித் சர்மா முகத்துல இப்ப எல்லாம் ரொம்ப பயம் தெரியும்; தேவை இல்லாமல் பேசிய முன்னாள் வீரர் !! 2

குறிப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் தன்னுடைய கேப்டன் பொறுப்பை சரிவர பயன்படுத்தி இந்திய அணியை, வெற்றியின் பாதையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் ரோகித் சர்மாவை பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் நிர்வாக பாராட்டுகின்றனர்.

 

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வெற்றி பெற்று கொடுப்பதால் மட்டும் இந்திய அணியின் தகுதியான கேப்டனாகி விட முடியாது என்று விமர்சனம் எழுந்த நிலையில் ரோகித் சர்மா தன்னுடைய அபாரமான கேப்டன்ஷிப் திறமையை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட்டிலும் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

முன்ன மாதிரி இல்ல... ரோஹித் சர்மா முகத்துல இப்ப எல்லாம் ரொம்ப பயம் தெரியும்; தேவை இல்லாமல் பேசிய முன்னாள் வீரர் !! 3

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தல், சீனியர் வீரர்களை சமாளித்தல், பேட்டிங் ஆர்டரில் வித்தியாசம் காட்டுதல் என பல்வேறு விதமான யுக்திகளை கையாண்டு வெற்றிகர இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மாவை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்து பேசியுள்ளார்.

முன்ன மாதிரி இல்ல... ரோஹித் சர்மா முகத்துல இப்ப எல்லாம் ரொம்ப பயம் தெரியும்; தேவை இல்லாமல் பேசிய முன்னாள் வீரர் !! 4

ரோகித் சர்மா குறித்து முகமது ஹபீஸ் பேசியதாவது, “இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையிலும் ரோஹித் சர்மாவின் முகபாவனை சரியில்லை, டாஸ் போட வரும் பொழுது ரோஹித் சர்மாவின் பாடி லாங்குவேஜ் அவர் பதட்டமாக இருப்பதை உணர்த்துகிறது, ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பின் அழுத்தம் அவரை இப்படி பதற்றத்துடன் வைத்துள்ளது என நினைக்கிறேன், அவர் இந்திய அணியின் கேப்டனாக நீண்ட காலம் இருக்க முடியாது, இதன் காரணமாகவும் அவர் அப்படி தோற்றமளித்திருக்கலாம். நானும் கேப்டனாக இருந்திருக்கிறேன் ஒரு அணியை வழி நடத்துவதென்பது எவ்வளவு நெருக்கடியான நிலை என்பது எனக்கு தெரியும், சில இடங்களில் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பல்வேறு விதமான யோசனைகளிலும் நெருக்கடிகளிலும் தவிர்த்து வரும் ரோகித் சர்மாவை நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்று முகமது ஹபிஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *