சும்மா எல்லாரும் திட்டாதீங்க... ஆசிய கோப்பையில் பாருங்க இந்த பையன் யாருன்னு தெரியும்; இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு !! 1

முகமது சமிக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கொடுத்தது சரியான முடிவு தான் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

சும்மா எல்லாரும் திட்டாதீங்க... ஆசிய கோப்பையில் பாருங்க இந்த பையன் யாருன்னு தெரியும்; இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு !! 2

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக பேசி வருகின்றனர்.

குறிப்பாக பும்ரா போன்ற ஒரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில் அனுபவ வீரர் முகமது சமியை நீக்கிவிட்டு ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்று பெரும்பாலானோர் இந்திய அணியின் தேர்வாளர்களை விமர்சித்து வருகின்றனர்.

சும்மா எல்லாரும் திட்டாதீங்க... ஆசிய கோப்பையில் பாருங்க இந்த பையன் யாருன்னு தெரியும்; இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு !! 3

இது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமான தொடரில் ஆவேஷ் கான் போன்ற இளம் வீரரை பயிற்றுவிப்பதற்காகத்தான் இந்திய அணி தேர்வாளர்கள் இவ்வாறு செய்துள்ளதாக சிலர் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

 

அந்த வகையில், ஆசியக் கோப்பையில் முகமது சமிக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கொடுத்தது சரியான முடிவு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.சும்மா எல்லாரும் திட்டாதீங்க... ஆசிய கோப்பையில் பாருங்க இந்த பையன் யாருன்னு தெரியும்; இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு !! 4

இதுகுறித்து சபா கரீம் பேசியதாவது, “ஒருமுறை இளம்வீரர் ஆவேஷ் கானுக்கு அணியில் இடம் கொடுத்துவிட்டால் அவரை உடனே நீக்குவது சரியான முடிவு கிடையாது, அந்த இளம் வீரர் எந்த ஒரு தவறுமே செய்யவில்லை. பும்ரா போன்ற ஒரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக அணியில் இல்லாத போது நல்ல பார்மில் இருக்கும் முகமது சமியை அணியில் தேர்ந்தெடுக்காததை நினைத்து சிலர் விமர்சனம் செய்கின்றனர், அது எனக்கு புரிகிறது ஆனால் தேர்வாளர்களின் பார்வையில் அவர்கள் இளம் வீரரை மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இது கடினமான வேலை தான் ஆனால் இதுவே சரியான முடிவு, ஆசிய கோப்பையில் தேர்வு குழு எடுத்த இந்த அணியை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். இது மிகவும் சம பலம் வாய்ந்த அணியாக உள்ளது ரோகித் சர்மாவின் யுக்திகளுக்கும்,திட்டங்களுக்கும் ஏற்றார் போல் இந்த அணி உள்ளது” என்றும் சபா கரீம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *