ஷாகிப் அல் ஹசன் கேப்டன்... ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஷாகிப் அல் ஹசன் கேப்டன்... ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு !! 2

இந்த தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த வாரமே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அணியையே அறிவிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்த வங்கதேச கிரிக்கெட் அணி, ஒருவழியாக இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியில் அனாமுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், ஆஃபிப் ஹூசைன், மஹ்மதுல்லாஹ், மெஹ்தி ஹசன் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

ஷாகிப் அல் ஹசன் கேப்டன்... ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு !! 3

அதே போல் தஸ்கின் அஹமத், மெஹ்தி ஹசன், பர்வேஸ் ஹூசைன், சைஃபுதீன், சபீர் ரஹ்மான் போன்ற வீரர்களுக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி;

ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), அனாமுல் ஹூசைன், முஸ்தபிகுர் ரஹிம், அஃபிஃப் ஹூசைன், ஹூசைன், மஹ்மதுல்லாஹ், மெஹ்தி ஹசன், முகமது சைஃபுதீன், ஹசன் முகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், நசூம் அஹமத், சபீர் ரஹ்மான், ஹசன் மிராஸ், இபாடட் ஹூசைன், பர்வேஸ் ஹூசைன், நூருல் ஹசன், தஸ்கின் அஹமத்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *