ஷமி நல்ல பந்துவீச்சாளர் தான்... ஆனால் அவரவிட தரமான பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்காங்க; ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு !! 1

முகமது ஷமியை விட நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் உள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஷமி நல்ல பந்துவீச்சாளர் தான்... ஆனால் அவரவிட தரமான பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்காங்க; ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு !! 2

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான், தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சீனியர் வீரரான முகமது ஷமியை விட ஆவேஸ் கானிற்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்..? முகமது ஷமி இல்லாமல் ஆசிய கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்வது முட்டாள்தனம் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.

ஷமி நல்ல பந்துவீச்சாளர் தான்... ஆனால் அவரவிட தரமான பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்காங்க; ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு !! 3

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், முகமது ஷமியை விட நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “முகமது ஷமி மிக மிக சிறப்பான பந்துவீச்சாளர். அவர் இந்திய அணிக்காக பல வருடமாக தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். என்னை பொறுத்தவரையில் அவரது பலம் டெஸ்ட் போட்டிகள் தான், டெஸ்ட் போட்டிகளில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது சாதரண விசயம் கிடையாது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் களமிறங்குகிறது, எனவே தான் முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை என நான் கருதுகிறேன். ஒருவேளை நான்கு வேகப்பந்து விச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என இந்திய அணி நினைத்திருந்தால், முகமது ஷமி நான்காவது வீரராக சேர்க்கப்பட்டிருப்பார். முகமது ஷமியை விட நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி.20 உலகக்கோப்பைக்கான தொடரையும் இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் எதிர்கொள்ளும் என கருதுகிறேன். அதிகமான சுழற்பந்து வீச்சாளர்களுடன் தான் இந்திய அணி டி.20 உலகக்கோப்பையையும் எதிர்கொள்ளும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஷமி நல்ல பந்துவீச்சாளர் தான்... ஆனால் அவரவிட தரமான பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்காங்க; ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு !! 4

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.

ஸ்டாண்ட்பை வீரர்கள்;

ஸ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *