ஷாகின் அப்ரிடிய பார்த்து பயப்பட தேவையே இல்ல... இத மட்டும் பன்னுங்க போதும்; ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடியை இந்திய அணியின் இந்த மூன்று அதிரடி பேட்ஸ்மேன்கள் சமாளித்து விடுவார்கள் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

2021 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவை சுக்குநூறாக்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சஹின் அப்ரிடி, இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் ஷர்மா,விராட் கோலி,கே எல் ராகுல் ஆகியவர்களின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை சீர்குழைய வைத்தார். இதனால் இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்லும் கனவு முற்றிலுமாக சிதைந்தது.ஷாகின் அப்ரிடிய பார்த்து பயப்பட தேவையே இல்ல... இத மட்டும் பன்னுங்க போதும்; ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

இந்த நிலையில் 28ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பையிலும் இதே போன்று ஒரு நிகழ்வு மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்று இந்திய ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் விமர்சகற்களும் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.

ஆனால் நல்ல பார்மில் இருக்கும் இந்திய வீரர்கள், சகின் அப்ரிடியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து விடுவார்கள் என்று இந்திய அணிக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஷாகின் அப்ரிடிய பார்த்து பயப்பட தேவையே இல்ல... இத மட்டும் பன்னுங்க போதும்; ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனரியாவே.,சகின் அப்ரிடியின் பந்துவீச்சை இந்திய அணி வீரர்கள் சமாளித்து விடுவார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனரியா பேசுகையில்,“ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இருக்கும் வரை சகீன் அப்ரிடியை பார்த்து பயப்படத் தேவையில்லை, இந்திய வீரர்கள் சகீன் அப்ரிடி வீசும் ஸ்விங் பந்துகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும், அவர்கள் எப்படிப்பட்ட நிலையை சமாளிக்க துணிந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக உடம்பில் போடப்படும் பந்து மற்றும் லெக்-சைடில் போடப்படும்  பந்தை கையாள தெரிந்திருக்க வேண்டும்.சகீன் அப்ரிடிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் ஸ்கொயர்-லெக்கில் அடிக்கும் பிலிக் ஷாட் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று டேனிஷ் கனரியா பேசியிருந்தார்.ஷாகின் அப்ரிடிய பார்த்து பயப்பட தேவையே இல்ல... இத மட்டும் பன்னுங்க போதும்; ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

மேலும் தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய டேனிஷ் கனரியா, உலகக் கோப்பை தொடர்க்கு பின் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஆசிய கோப்பையில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் பெரும்பாலானவர்கள் தினேஷ் கார்த்திக்கின் உடற்தகுதியையும் அவருடைய பார்மையும் பினிஷிங்கையும் கவனித்துக்கொண்டு வருகினறனர். தினேஷ் கார்த்திகை தவிர்த்து ஹர்திக் பாண்டியாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இது இவர்களுடைய கடைசி டி20 உலக கோப்பை தொடராக இருக்கலாம் என்றும் டேனிஷ் கனரியா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *