மதீஷா பதிரானாவிற்கு அணியில் இடம்…. இலங்கை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது வங்கதேச அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், இலங்கை அணியும் மோதுகின்றன.
இலங்கையின் பல்லகலே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டிக்கான இலங்கை அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மதீஷா பதிரானாவிற்கு இடம் கிடைத்துள்ளது. அதே போல் துனில் வெல்லால்கே என்னும் வீரரும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டிக்கான வங்கதேச அணியில் முகமது நயீம், தன்சித் ஹசன், நஜிமுல் ஹூசைன், மெஹ்தி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேச அணியின் ஆடும் லெவன்;
முகமது நயீம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹூசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிர்டாய், ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிகுர் ரஹீம், மெஹ்தி ஹசன் மிராஜ், மெஹ்தி ஹசன், தஸ்கின் அஹமத், சொரிஃபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்.
இலங்கை அணியின் ஆடும் லெவன்;
பதும் நிஷான்கா, திமுத் கருணாரத்னே, குஷால் மெண்டீஸ், சதீரா சமரவிக்ரமே, சாரித் அஸ்லன்கா, டி சில்வா, தசுன் ஷானகா, துனித் வெல்லால்கே, மதீஷா தீக்ஷன்னா, கசுன் ரஜிதா, மத்தீஷா பதிரானா.