மீண்டும் மீண்டும் ரத்தாகும் சர்வதேச தொடர் ; புதிய சிக்கல்லை ஏற்பத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ! 1

1984 முதல் தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வரும் ஆசிய  கிரிக்கெட் தொடர் இதுவரை 16 சீசங்கள் நிறைவடைந்து இருக்கிறது.  இதில் இந்திய அணி 7 முறை கோப்பையை வென்று இருக்கிறது. கடந்த 2018ல் நடைபெற்ற தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கிறது.

இந்நிலையில் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருந்த ஆசிய கோப்பை t20 தொடர் கொரோனா வைரஸ் காரணமாக 2021க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உரிமை பெற்றிருந்தது. இதன்பிறகு ஒரு சில காரணத்தால் பாகிஸ்தான் அணி இந்த வாய்ப்பை இலங்கை அணியிடம் விட்டுக் கொடுத்து விட்டது.

மீண்டும் மீண்டும் ரத்தாகும் சர்வதேச தொடர் ; புதிய சிக்கல்லை ஏற்பத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ! 2

ஆனால் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்து வந்ததால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஆசிய கோப்பை தொடர் அடுத்த ஆண்டு(2021) ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப்படுகிது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசிய கிரிக்கெட் கோப்பை நடத்தப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் இந்தாண்டும் நடத்த வாய்ப்பு இருக்காது என்று கருத்துக்கணிப்பு கூறியது. 

மீண்டும் மீண்டும் ரத்தாகும் சர்வதேச தொடர் ; புதிய சிக்கல்லை ஏற்பத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ! 3

அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனை உறுதி செய்து இருக்கிறது. இந்தத் தொடர் 2022ம் ஆண்டிற்கு மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் எஹ்சன் மணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் பேசி இந்த ஆண்டு நடத்த திட்டமிட்ட ஏ.சி.சி ஆசியா கோப்பை தொடர் 2022 க்கு ஒத்திவைக்க முடிவு செய்ததாக கூறியிருக்கிறார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *