ஆசிய கோப்பையில் என் பெயர் இல்லை என்றதும் வருத்தப்பட்டேன், ஆனால் இவருடைய பெயர் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தெரிவித்திருந்தார்.
பல ஆசிய நாடுகள் பங்கேற்று பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் ஆசியன் கேம்ஸ், இந்த வருடம் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி அனுப்பப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பு தெரிவித்துவிட்டது.

குறிப்பாக உலகக்கோப்பை போட்டிகளின் சில போட்டிகளுடன் ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் போட்டியும் குறுக்கிடுவதால் முதன்மையான இந்திய அணி செல்ல முடியாது. ஆகையால் இரண்டாம் கட்ட இந்திய அணியை அனுப்புவதற்கு திட்டமிட்ட பிசிசிஐ., ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்ததுள்ளது.
ஆசிய கோப்பையில்இளம் வீரர்கள் கொண்ட பட்டாளம் என்ற பிசிசிஐயின் இந்த முடிவு பெரும்பாலான முன்னால் வீரர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆசிய தொடர் குறித்து பெரும்பாலானவர்கள் தங்களுடைய கருத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான்., ஆசிய கோப்பை குறித்தும், ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து ஷிகர் தவான் பேசுகையில்.,ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்பதை பாத்து நான் கொஞ்சம் அதிர்ந்துவிட்டென்,ஆனால் இந்திய அணியின் இந்த புதிய முயற்சியை நான் வரவேற்கிறேன்,அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.மேலும் ஆசியக் கோப்பையில் ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டானக செயல்படுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அனைத்து இளம் இந்திய வீரர்களும் உள்ளனர்.நிச்சயம் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என ஷிகர் தவான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.