கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறாரோ, அதை விட அதிகமாக கார்களை காதலிப்பவர் விராத் கோலி!
வெளிநாட்டில் எந்த புதிய வகை கார் வந்தாலும் கை பரபரக்கும் அவருக்கு, ஓட்டிப் பார்க்க. அனுஷ்கா சர்மாவுடனான திருமணத்துக்குப் பிறகு புதிய கார் ஒன்றை புக் செய்திருந்தார் விராத். இப்போது அந்த காஸ்ட்லி கார் அவர் கைக்கு வந் திருக்கிறது. அந்த கார், பென்ட்லி கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT)! இதன் விலை அதிகமில்லை, ஜஸ்ட் ரூ.3.29 கோடியில் இருந்து ரூ.4.43-க்குள்தான்! தனது சகோதரர் விகாஸ் கோலி பெயரில் இந்த காரை பதிவு செய்திருக்கிறார் விராத்.
இதே போன்ற காரை கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரும் வைத்துள்ளனர்.
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ’ஆடி’யின் ஆஸ்தான தூதர் விராத். இதன் காரணமாக இந்த நிறுவனம் புதிய கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும் போதெல்லாம் ஒரு காரை, கோலிக்கு பார்சல் பண்ணி வைக்கும். அதோடு, கிரிக்கெட் போட்டிகளில் பரிசாக கிடைக்கும் கார்களையும் சேர்த்து வைத்திருக்கிறார் விராத். அவரிடம் வேறு என்னென்ன கார்கள் இருக் கிறது?
ஆடி ஆர் 8 எல்எம்எக்ஸ் லிமிட்டெட் எடிசன் (Audi R8 LMX Limited Edition), ஆடி ஆர் 8 வி 10 (Audi R8 V10), ஆடி ஏ8எல் டபிள்யூ12 குவாட்ரா (Audi A8L W12 Quattro), ஆடி எஸ் 6 (Audi S6), ஆடி க்யூ7 4.2 டிடிஐ (Audi Q7 4.2 TDI), டொயட்டா ஃபார்சுனர் (Toyota Fortuner) டஸ்டர் (Duster).
ஆமா, இதையெல்லாம் நிறுத்த ஒரு ஸ்டேடியம் மாதிரி இடம் வேணுமே?
இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் விராட் கோலி, சர்வதேச நாடுகளில் மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆனால், இங்கிலாந்து மண்ணில் அவருக்கு ஃபார்ம் நீடிக்கவில்லை என்றே சொல்லலாம். இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரில் கோலியின் சராசரி ரன்கள் வெறும் 13.40 மட்டுமே. இந்நிலையில், இங்கிலாந்திற்கு அடுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி தயாராகி வருகிறது. அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் விராட் கோலி ஜொலிக்கவேண்டும் என்பதற்காக, இங்கிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூர் போட்டிகளில் களமிறங்க இருக்கிறார். அங்குள்ள விளையாட்டுச் சூழலை உள்வாங்கிக் கொள்வதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஐ.பி.எல். முடிந்தபின் தொடங்கயிருக்கும் இந்தப் போட்டிகளில் கோலி கலந்துகொள்வது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இங்கிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்ஸ், ‘உள்நாட்டு வீரர்களை வலுவாக்குவது மட்டும்தான் உள்நாட்டு கிரிக்கெட்டின் நோக்கம். இங்கு வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூர் வீரர்களை அதில் அதிகப்படுத்தி, எதிர்கால அணியை வலுச்சேர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு கோலிக்கு பலனளிக்கும் விதமான இந்த முயற்சியின் பலன், இங்கு இந்தியாவிற்கு எதிராக நடக்கயிருக்கும் டெஸ்ட் தொடரில் பிரதிபலிக்கும்’ என தெரிவித்துள்ளார்.