வீடியோ: கேட்ச் பிடிக்க விடாமல் பவுலரை தள்ளிவிட்ட ஆஸி., வீரர்; மேல்முறையீடு செய்யாமல் மன்னித்துவிட்ட இங்கிலாந்து - ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டத்தில் நடந்த காமெடி சம்பவம்! 1

கேட்ச் பிடிக்க ஓடிவந்த வீரரை பிடிக்க விடாமல் தடுத்த மேத்தியூ வேட்-இன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முதல் டி20 போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் களமிறங்கினர். துவக்கம் முதலே இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை துவசம் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டது. முதல் விக்கெட் இருக்கு இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் 68 ரன்கள் விலாசினார். இதில் நான்கு சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு துவக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 51 பந்துகளில் 84 ரன்கள் விலாசினார். இவர் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது

வீடியோ: கேட்ச் பிடிக்க விடாமல் பவுலரை தள்ளிவிட்ட ஆஸி., வீரர்; மேல்முறையீடு செய்யாமல் மன்னித்துவிட்ட இங்கிலாந்து - ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டத்தில் நடந்த காமெடி சம்பவம்! 2

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர் வார்னர் 44 பந்துகளில் 73 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். மிச்சல் மார்ஸ் 36 ரன்களும், ஸ்டாயினிஸ் 35 ரன்கள் அடித்தனர். கடைசியில் வந்த வேட் 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

14.3 ஓவர்களில் 158 ரன்கள் அடித்திருந்த ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுவிடும் எதிர்பார்க்கப்பட்டபோது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வீடியோ: கேட்ச் பிடிக்க விடாமல் பவுலரை தள்ளிவிட்ட ஆஸி., வீரர்; மேல்முறையீடு செய்யாமல் மன்னித்துவிட்ட இங்கிலாந்து - ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டத்தில் நடந்த காமெடி சம்பவம்! 3

இப்போட்டியில் சுவாரசியமான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. போட்டியின் 17 வது ஓவரை மார்க் வுட் வீசினார். 16.3 வது ஓவரில்  மேத்தியூ வேட் அடித்த பந்து மேலே சென்றது. அதை ஓடி வந்து பிடிப்பதற்கு மார்க் வுட் முயற்சி செய்தார். ஆனால் அவரை பிடிக்க விடாமல் இடையூறு செய்யும் விதமாக வேட் தடுத்தார். இது இடையூறு விதியின் அடிப்படையில் நிச்சயம் அவுட் ஆகும். ஆனால் களத்தின் நடுவரிடம் முறையிட்டபோது, அவுட் கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணி மேல்முறையீடு செய்திருந்தால் நிச்சயம் அவுட் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் மரியாதை நிமிர்த்தமாக அவர்கள் மேல்முறையீடு வேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர். குறிப்பாக ஜோஸ் பட்லர் மறுத்துவிட்டார்.

மேத்தியூ வேட்-இன் இந்த செயலுக்காக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *