ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னருக்கு எல்பிடபிள்யு முறையில் அவுட் கொடுத்திருக்கிறார் களத்தில் இருந்த நடுவர். இதற்காக ஆத்திரமடைந்து அவரிடம் கத்தியுள்ளார் டேவிட் வார்னர். இதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இரு அணிகளும் மோதிவரும் உலக கோப்பை லீக் போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து நல்ல துவக்கம் பெற்றது. ஆனால் அதை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல முடியாமல் மிடில் ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததால் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
210 ரன்கள் எனும் சற்று எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம் போல டேவிட் வார்னர் மற்றும் மிச்சல் மார்ஸ் இருவரும் களம் இறங்கினர். கடந்த சில போட்டிகளில் நன்றாக விளையாடிய பார்மில் இருந்த டேவிட் வார்னர் 6 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்தார்.
போட்டியின் நான்காவது ஓவரில் இளம் வீரர் மதுஷங்க்கா வீசிய முதல் பந்திலையே எல்பிடபிள்யு முறைப்படி வார்னர் அவுட் கொடுக்கப்பட்டார். இந்த முடிவை டேவிட் வார்னர் மேல் முறையீடு செய்தார். அப்போது வார்னருக்கு “அம்பையர்ஸ் கால்” என்று வந்தது.
இதனால் சற்று ஆத்திரமடைந்த டேவிட் வார்னர் களத்தில் இருந்த நடுவர் வில்சனை பார்த்து ஆக்ரோசமாக கத்தினார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. வீடியோ இணையதளத்தில் வைரலாகவும் பரவி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வீடியோ:
— Cricket Dekh Lo (@Hanji_CricDekho) October 16, 2023
அடுத்து வந்த ஸ்மித் டக் அவுட் ஆனார். மிச்சல் மார்ஸ் அரைசதம் அடித்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறது. களத்தில் லபுச்சானே, இங்லிஷ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர். முதல் வெற்றியை நோக்கில் கொண்டும் ஆடி வருகிறது.