இந்திய வீரர்களை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுவதற்கு இது தான் காரணம்; மைக்கெல் கிளார் ஓபன் டாக் !! 1

இந்திய வீரர்களை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுவதற்கு இது தான் காரணம்; மைக்கெல் கிளார் ஓபன் டாக்

ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட விரும்புவதில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களை மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். குறிப்பாக ஆஷஸ் தொடரின்போதும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் இந்த ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும்.

இந்திய வீரர்களை சீண்டியே அவுட்டாக்கும் யுக்தியை கடைபிடிப்பார்கள். ஆனால் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றப்பிறகு, விராட் கோலி ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இணையாக வார்த்தைப்போரில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது கிடையாது.

இந்திய வீரர்களை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுவதற்கு இது தான் காரணம்; மைக்கெல் கிளார் ஓபன் டாக் !! 2

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதால்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகிறார்கள் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘சர்வதேச அளவிலும், உள்ளூர் அளவிலும் பொருளாதார அடிப்படையில் இந்தியா எவ்வளவு வலுவானது என்பது நாம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆஸ்திரேலியா, மற்ற அணிகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவர்களுக்கு உண்டான குணத்தில் இருந்து மாறுபட்டு இந்தியாவுக்கு சாதகமாக மாறிவிடுகின்றன. கோலி அல்லது மற்ற இந்திய அணி வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

இந்திய வீரர்களை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுவதற்கு இது தான் காரணம்; மைக்கெல் கிளார் ஓபன் டாக் !! 3

10 வீரர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால், அவர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் அணிக்காக எடுக்கிறார்கள். விராட் கோலிக்கு எதிராக ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது, கோலி தன்னை பெங்களூர் அணிக்காக எடுக்க வேண்டும், அதன்மூலம் ஆறு வாரங்களில் ஒரு மில்லியன் டாலர் பெறலாம் என அந்த வீரர்கள் விரும்புகிறாரக்ள். இதன்மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் இருந்து விலகி சாதுவான நிலைக்கு மாறிவிட்டார்கள் என்று உணர்கிறேன்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *