இந்தியாவுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 1

இந்தியாவுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணியுடனான ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்தியாவுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 2

இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச்சே நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 3

காயத்தால் தவித்து வரும் ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் பெயர் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர வழக்கமான அனைத்து வீரர்களும் இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியுடனான தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி;

  1. ஆரோன் பிஞ்ச், 2. சீன் அப்போட், 3. ஆஷ்டோன் அகர், 4. அலேக்ஸ் கேரி, 5. பேட் கம்மின்ஸ், 6. கேமரூன் க்ரீன், 7. ஜோஷ் ஹசில்வுட், 8. ஹென்ரிக்ஸ், 9. மார்னஸ் லாபஸ்சேன், 10. க்ளென் மேக்ஸ்வெல், 11. டேனியல் சாம்ஸ், 12. கேன் ரிச்சர்ட்சன், 13. ஸ்டீவன் ஸ்மித், 14. மிட்செல் ஸ்டார்க், 15. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 16. மேத்யூ வடே, 17. டேவிட் வார்னர், 18. ஆடம் ஜம்பா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *