இந்திய அணிக்கு தொல்லை கொடுக்க களமிறங்கும் இரண்டு முக்கிய வீரர்கள்; அடுத்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 1

இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி துவங்க உள்ளது.

இந்திய அணிக்கு தொல்லை கொடுக்க களமிறங்கும் இரண்டு முக்கிய வீரர்கள்; அடுத்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 2

இந்தநிலையில், இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காயம் காரணமாக இந்திய அணியுடனான கடந்த இரண்டு போட்டியிலும் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரரான டேவிட் வார்னர், அடுத்த போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு முக்கிய வீரர்களான சியான் அபோட் மற்றும் வில் புகோஸ்கியும் அடுத்த போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் கடந்த இரண்டு போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ பர்ன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு தொல்லை கொடுக்க களமிறங்கும் இரண்டு முக்கிய வீரர்கள்; அடுத்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 3

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

டிம் பெய்ன் (கேப்டன்), சியான் அபோட், பேட் கம்மின்ஸ், கேமிரான் க்ரீன், மார்கஸ் ஹரீஸ், ஜோஸ் ஹசில்வுட், டர்வீஸ் ஹெட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுசேன், நாதன் லயோன், மிட்செல் நிசெர், ஜேம்ஸ் பேட்டிசன், வில் புவ்கோஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார், மிட்செல் ஸீவ்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *