ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் டி20 ஆகிய தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்று விதமான போட்டிகளுக்கும் தனித்தனியாக அணி அறிவிக்கப்பட்டு அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்கள். மொத்தம் 32 வீரர்கள் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்து இருக்கிறது. இந்த அணிதான் இந்தியாவிற்கு எதிராக மொதப்போகிறது. 17 பேர் கொண்ட அணியில் பல இளம் வீரர்கள் இடம்பிடித்து இருக்கின்றார். சீன் அபோட், மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய புதுமுக வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் உள்ளூர் தொடரில் நன்றாக விளையாடியவர்கள்.

அணியின் கேப்டனாக டீம் பெயின் நீடிக்கிறார். ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், நேதன் லயன், ஜேம்ஸ் பேட்டின்சன் ,பேட் கம்மின்ஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். சென்ற வருடம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வருடம் கடைசி முதல் டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி: சீன் அபோட், ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபூசாக்னே, நாதன் லியோன், மைக்கேல் நேசர், டிம் பெயின் (கே), ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மத்தேயு வேட், டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா ஏ அணி: சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், ஜாக்சன் பேர்ட், அலெக்ஸ் கேரி (கீ), ஹாரி கான்வே, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் தலைவர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், நிக் மேடின்சன், மிட்செல் மார்ஷ் ( உடற்தகுதிக்கு உட்பட்டது), மைக்கேல் நேசர், டிம் பெயின், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, மார்க் ஸ்டெக்கீ, வில் சதர்லேண்ட், மிட்செல் ஸ்வெப்சன்