ஆஸ்திரேலியா கேப்டன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு? 1

இங்கிலாந்து ஆஸ்திரேலியா க்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியிடன் 5-0 என்ற கணக்கில் வைட் வாஷ் ஆனது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆக பொறுப்பில் இருந்த டிம் பெயின் ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா கேப்டன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு? 2

ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 12 மாதங்கள் தடை செய்யப்பட்டார். அதன்பிறகு டிம் பெயின் கேப்டன் பொறுப்பை ஏற்க அழைக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த பெயின் இங்கிலாந்து செல்லும் ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் பொறுப்பு வகிக்குமாறு அழைக்கப்பட்டார்.

இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்தது. இதில் 0-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி அடைத்தது. இதே தொடரில் தான் ஒருநாள் போட்டியில் அதிக ரன்னான 481 ரன்னும் குவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா கேப்டன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு? 3

மேலும், இந்த தொடரில் பெயினும் வெறும் 36 ரன்கள் எடுத்திருந்தார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 15 ரன்கள் தான். இது பேட்டிங்கில் மட்டுமல்ல கேப்டன் பொறுப்பிலும் மிக மோசமான தொடராக இருந்தது இவருக்கு. இதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, நான் சிறப்பாக செயல்பட தவறினேன், எனக்கு தெரியும் நான் நன்றாக செயல்பட வந்தேன் என்று. இருந்தபோதிலும் இந்த வயதில் புதிய பொறுப்பை ஏற்று வழி நடத்தி வெற்றி காண்பது கடினமாகவே இருந்தது. ஆனால் இவ்வளவு மோசமாக தோற்ப்போம் என எதிர்பார்க்கவே இல்லை. வருந்துகிறேன்.

ஆஸ்திரேலியா கேப்டன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு? 4

நான் டெஸ்ட் போட்டியில் நிறைய ஆடி இருக்கிறேன். அதன் கேப்டன் பொறுப்பில் எந்த வித பதட்டமும் இல்லை. இதனால் எனது லிமிடெட் ஓவர் வாழ்க்கையை நான் சிந்தித்து முடிவெடுத்து தான் ஆக வேண்டும்.

நான் இந்த தொடரில் மிகவும் சிரமப்பட்டேன். ஒருமுறை சரிவர அமையவில்லை என்றால் அதை திரும்ப பெற கடினமாக முயற்சிக்க வேண்டும். ஆனால் எனது முயற்சிகள் எனக்கு பலனளிக்கவில்லை என வருந்தினார். வரும் வாரங்களில் ஒருநாள் போட்டியை ஆடுவது குறித்து தக்க முடிவை எடுப்பேன் என பேட்டியளித்தார்.

தற்போது, இவருடன் இருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கோரே கடைசி இரண்டு போட்டிகளில் தன் இறக்கி விடப்பட்டார். ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படவில்லை. பேட்டிங் மட்டுமே ஆடினார். இவர் டி20 அணியின் துணை கேப்டன் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். டி20 அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *