ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரும் பேட்ஸ்மேனும் ஆன டேரன் லீமென் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
47 வயதாகும் இவர் அதிக போட்டியில் விளையாடுவதாலும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான பயிற்சியாளர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார்.
சமீப காலமாக ஆஸ்திரேலியா அணி விளையாடும் ஒருநாள் தொடருக்கான அணியுடன் லீமென் செல்வதில்லை. அவருக்குப் பதிலாக மாற்று பயிற்சியாளர் தலைமையில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இந்தியாவிற்கு எதிரான தொடரின்போது லீமென் இந்தியா வரவில்லை.
ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங், கில்லெஸ்பி, டேவிட் சாகேர் ஆகியோர் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டுள்ளனர். தற்போது லீமென் ஆஷஸ் தொடருக்கான சிறந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.