பெரிய ஆளா இருக்கலாம்… ஆனா கண்டிப்பா இவருக்கு டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இடம் கிடைக்காது; டேனியல் வெட்டோரி உறுதி
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கிடைக்காது என ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன.
டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், இந்திய அணியுடனான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டேனியல் வெட்டோரி, இறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து டேனியல் வெட்டோரி பேசுகையில், “இறுதி போட்டிக்கான இந்திய அணியின் பந்துவீச்சாளர்களாக யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற ஆலோசனையை நாங்களும் நடத்தி வருகிறோம். ரவீந்திர ஜடேஜாவிற்கு ஆடும் லெவனில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்றே கருதுகிறேன். தற்போது அவர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருப்பதால் அவருக்கான இடம் இந்திய அணியில் மறுக்கப்படாது என்றே கருதுகிறேன், அவரே 6வது இடத்தில் களமிறங்குவார் என்று கருதுகிறேன். அடுத்ததாக இந்திய அணி யாருக்கு இடம் கொடுக்க போகிறது என்பது தான் முக்கியே கேள்வியே. ஷர்துல் தாகூர், ரவிச்சந்திர அஸ்வின் என இருவருமே 7வது இடத்திற்கு சரியானவர்கள் என்பதால் இருவரில் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற குழப்பம் இந்திய அணிக்கு ஏற்படும். எனது கணிப்பு சரியாக இருந்தால் இந்திய அணி அஸ்வினை விட ஷர்துல் தாகூருக்கே முக்கியத்துவம் கொடுக்கும் என கருதுகிறேன், இதனால் அஸ்வினுக்கு இறுதி போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்றே தோன்றுகிறது” என்று தெரிவித்தார்.