ஆஸ்திரேலியாவின் எம்எஸ் தோனி இவர்தான்! வேகப்பந்துவீச்சாளர் ஓபன் டாக்!
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு இங்கிலாந்தில் இருதரப்பு தொடர்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதன்முதலாக 117 நாட்கள் கழித்து இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன் பின்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி கடைசி வரை நன்றாக ஆடிவிட்டு கடைசி 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இருந்தாலும் அந்த அணியின் டேவிட் வார்னர் 58 ரன்களும், ஆரோன் பின்ச் 46 ரன்களும், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தனர். இது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி. ஆனால், கவனமின்மையால் இங்கிலாந்து அணியை எளிதாக தட்டி விட்டு சென்றுவிட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்காக நாங்கள் ஒரு எம்எஸ் டோனியை உருவாக்கி வருகிறோம் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்…
நாங்கள் இதனைப்பற்றி சமீபகாலமாக பேசி வருகிறோம். எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் திறமையான வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பவர் நன்றாக நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் நாங்கள் எம்எஸ் தோனி போன்ற ஒருவரை கண்டுபிடித்து விட்டோம். ஏனெனில் 300 முதல் 400 போட்டிகளில் விளையாட வேண்டும் அப்படிப்பட்ட வீரர்தான் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்.
இது ஒரு இரவில் நடக்கப்போவதில்லை. அவரை தொடர்ந்து நாங்கள் வளர்த்து வருகிறோம் ஒரு கட்டத்தில் அவர் தோனியை போன்று மாறி விடுவார். தற்போது நாங்கள் வைத்திருக்கும் அணியும் சரியான அணி சரியான வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அதிக போட்டிகள் தேவைப்படுகிறது. அவ்வளவுதான். எங்கள் தோனி மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் தான் என்று தெரிவித்துள்ளார் பேட் கம்மின்ஸ்.