2019 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக 4வது வரிசையில் விளையாட, ஒருநாள் அணிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் கர்நாடக வீரர் மனிஷ் பாண்டே. 2015 உலககோப்பைக்கு பிறகு அந்த இடத்தை 10க்கும் மேற்பட்ட வீரர்களை சோதனை செய்தார்கள், ஆனால் அந்த இடத்தை கடைசியில் மனிஷ் பாண்டே பிடித்தார். அந்த 10 பேரில் 4வது தரவரிசையில் இறங்கி 2 வீரர்கள் தான் சதம் அடித்துள்ளார்கள். அதிலும் மனிஷ் பாண்டேவின் கை தான் ஓங்கி இருக்கிறது.
“அந்த இடத்தில் தொடர்ந்து விளையாட நான் கடினமாக உழைத்து வருகிறேன். இதுவரை நான் 4வது இடத்தில் தான் விளையாடுகிறேன், சில போட்டிகளில் வேண்டும் என்றால் மாறி விளையாடி இருக்கலாம். அந்த இடத்தில் தொடர்ந்து விளையாடி சிறப்பாக செயல் படவேண்டும். இதே இடத்தில் தொடர்ந்து நீடித்து பல போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக வெற்றி தேடி தர விரும்புகிறேன்,” என மனிஷ் பாண்டே கூறினார்.
கடந்த வருடம் நியூஸிலாந்து ஒருநாள் தொடர் முதல் தற்போதய ஆஸ்திரேலிய தொடர் வரை, சொல்லிக்கொள்ளும் போல் மனிஷ் பாண்டே விளையாடவில்லை. இதனால் அந்த இடத்தை யுவராஜ் சிங் பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
காயத்தில் இருந்து விடைபெற்ற லோகேஷ் ராகுலை இந்திய அணியில் விராட் கோலி சேர்த்தார். தொடக்கவீரருக்கு பதிலாக அவரை நடுத்தர வரிசையில் சோதனை செய்தனர். ஆனால், இலங்கை தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 28 ரன் மட்டுமே அடித்தார்.
“தற்போது அவருக்கு பதிலாக தான் அந்த இடத்தில் நான் விளையாடுகிறேன். இதனால், எனக்கு கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, சிறப்பாக விளையாடி அணியில் தொடர்ந்து இடம் பிடிப்பேன்,” என பாண்டே மேலும் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அதிக ரன் சேஸ் செய்யும் போது 4வது இடத்தில் மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியா இறங்கினார். சுழற்பந்து வீச்சாளர்கள் வரும் போது அதிரடியாக விளையாடுபவரை இறக்கலாம் என ஏற்கனவே நாங்கள் பிளான் போட்டோம் என மனிஷ் பாண்டே தெரிவித்தார். அந்த போட்டியில் ஹர்டிக் பாண்டியா அரைசதம் அடித்து அசத்தினார். 6வது இடத்தில் இறங்கிய பாண்டே 36 ரன் அடித்து சிறப்பாக விளையாடினார். ஆனால், அவருக்கு 4வது இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார்.