அஸ்வின் போலவே பந்துவீசும் இளம் உள்ளூர் ஸ்பின்னரை வைத்து ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 9ம் தேதி துவங்குகறது. இதில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆஸ்திரேலியா அணியினர் பெங்களூருவிற்கு வந்தடைந்தனர்.
இந்திய அணியினர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு ஓரிரு நாட்கள் ஓய்விற்கு பிறகு நாக்பூர் வந்து தங்களது பயிற்சியை துவங்கி விட்டனர். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் நாக்பூருக்கு சென்று பயிற்சி செய்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நம்மால் பார்க்க முடிந்தது.
கடைசி மூன்று பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதில் ஒருமுறை இந்திய மைதானத்திலும் இரண்டு முறை ஆஸ்திரேலிய மைதானங்களிலும் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இம்முறை இந்த டெஸ்ட் தொடரை கட்டாயம் கைப்பற்றியாக வேண்டும் என்கிற நினைப்பில் ஆஸ்திரேலியா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு நுணுக்கங்களை பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிகிறது.
அதில் ஒன்றாக, இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதற்கு வகுத்த திட்டத்தில் அச்சுஅசலாக ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே பௌலிங் மற்றும் டெக்னிக் பயன்படுத்தும் குட்டி அஸ்வின் என்று அழைக்கப்படும் இளம் இந்திய உள்ளூர் வீரரை பயிற்சி பவுளராக எடுத்து, அவரது பந்துவீச்சை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசானே உள்ளிட்டோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடத்தப்பட்டு வரும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் குறைந்தபட்ச வெற்றியைப் பெற்று தொடரையும் கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் தகுதிபெற முடியும். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி அந்த இறுதிப் போட்டிக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் தொடரை இழந்துவிட்டால் நம்பர் ஒன் இடத்தையும் இழக்க நேரிடும் அந்த இடத்திற்கு இந்திய அணி வந்துவிடும் என்பதும் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படுகிறது.
Mahesh Pithiya grew up being called “Ashwin” owing to his uncanny impersonation of his idol @ashwinravi99 & he ended up ‘playing’ Ashwin for Australia in their first training session on tour & making a big impression on Steve Smith. Here’s how #IndvAus https://t.co/GnAd63DFN6 pic.twitter.com/BgNwOWGDC6
— Bharat Sundaresan (@beastieboy07) February 3, 2023