ஆரோன் பின்சிற்கு காயம்; குழப்பத்தில் பரிதவிக்கும் ஆஸ்திரேலியா !! 1

ஆரோன் பின்சிற்கு காயம்; குழப்பத்தில் பரிதவிக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 6ம் தேதி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் துவங்க உள்ளது.

ஆரோன் பின்சிற்கு காயம்; குழப்பத்தில் பரிதவிக்கும் ஆஸ்திரேலியா !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி காத்துள்ளதால் இரு அணிகளும் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில் இரு அணிகள் இடையேயான பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ப்ரிதீவ் ஷா காயமடைந்ததால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு யார் துவக்கம் கொடுப்பார்கள் என்ற கவலையில் இந்திய ரசிகர்கள் உள்ளதை போலவே, ஆஸ்திரேலிய ரசிகர்களும் தற்போது கவலையடைந்துள்ளனர்.

ஆரோன் பின்சிற்கு காயம்; குழப்பத்தில் பரிதவிக்கும் ஆஸ்திரேலியா !! 3

ஆம்., வலைபயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான ஆரோன் பின்சிற்கு காயம் ஏற்பட்டதால் அவரால் முதல் போட்டியில் விளையாட முடியுமா, முடியாத என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஆரோன் பின்ச் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக யாரை துவக்க வீரராக களமிறக்குவது என்ற சிக்கல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளே தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் கூறும்போது, “நம்பர் 3-ல் சிறந்த வீரரை இறக்க வேண்டும் இந்த அணியில் கவாஜாதான் அது. மார்கஸ் ஹாரிஸ் நிச்சயம் வாய்ப்பளிக்கப்பட வேண்டிய வீரர்” என்றார்

ஆஸ்திரேலிய அணிக்கு இது போன்ற தேர்வுப் பிரச்சினையெல்லாம் எழுந்தது இல்லை, சமீபகால சச்சரவுகள், ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் தடைகள் ஸ்லெட்ஜிங், நடத்தை பற்றிய புதிய கட்டளைகள் ஆஸ்திரேலிய அணியினரைக் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது என்னவோ உண்மை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *