கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்திய அணியுடன் எஞ்சியுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் 26ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் எஞ்சியுள்ள கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, முதல் இரண்டு போட்டியில் விளையாடிய வீரர்களே கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
டிம் பெய்ன் தலைமையிலான அணியில், பேட்டிங் வரிசையில் ஆரோன் பின்ச், ஹரீஸ், உஸ்மான் கவாஜா, டர்வீஸ் ஹெட், சேன் மார்ஸ்,மிட்செல் மார்ஸ், போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் ஹசீல்வுட், நாதன் லயோன், பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்
இந்திய அணியுடனான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி;
டிம் பெய்ன்(கேப்டன்), பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஹரீஸ், ஜோஸ் ஹசீல்வுட், டர்வீஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் லயோன், மிட்செல் மார்ஸ், ஷான் மார்ஸ், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க்.