ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா; கொண்டாடும் ரசிகர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இந்திய அணி முதல் இன்னிங் ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னி ங்ஸை தொடங்கியது. பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியதால் அந்த அணி வீரர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. விக்கெட் டுகள் மளமளவென சரிந்தன. இதனால் அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 151 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த து. இந்திய தரப்பில் பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மயங்க் அகர்வால் 42 ரன்னும் ரிஷாப் 33 ரன்னும் எடுத்தனர். அணியின் ஸ்கோர், 8 விக்கெட் இழப்புக்கு 106 ஆக இருந்தபோது டிக்ளேர் செய்தார் இந்திய கேப்டன் விராத்.
ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டையும் ஹசல்வுட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னி லையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாரிஸ் 13 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்ச் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதைய டுத்து உஸ் மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் ஆடி வந்தனர். உணவு இடைவேளை வரை, 14 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்தது.
பின்னர் ஷமி, கவாஜாவை (33 ரன்)யும் பும்ரா ஷான் மார்ஷை (44)யும் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 34 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து மிட்செல் மார்ஷூம் கேப்டன் டிம் பெய்னும் இணைந்தனர். மிட்செல் 10 ரன்னிலும் டிம் பெய்ன் 26 ரன்னிலும் பெவிலியன் திரும்ப, அந்த அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்னாக இருந்தது.

இதனால் நான்காவது நாளான நேற்றே ஆஸ்திரேலிய வீரர்களின் அனைத்து விக்கெட்டும் விழுந்துவிடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
இதனால் இந்திய வீரர்களும் உற்சாகத்தில் திளைத்தனர். ஆனால், அவர்களின் கனவை கொஞ்சம் தள்ளி வைத்தார் கம்மின்ஸ். அவர்
நிதானமாக ஆடினார். மறு முனையில் மெதுவாக ஆடிய ஸ்டார்க் 18 ரன்னில் அவுட் ஆக, இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக் கெட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு 141 ரன்னும் தேவை என்ற நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், அங்கு கடும் மழை பெய்து வருவதால் ஆட்டம் தடைபட்டது. பின் னர் உணவு இடைவேளையின்போது மழை நின்றிருந்ததால் அதன்பின் போட்டித் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே கம்மின்ஸ் விக்கெட்டை, பும்ரா வீழ்த்தினார். அவர் 63 ரன் எடுத்தார். இதையடுத்து லியானுடன் ஹசல்வுட் இணைந்தார். லியான் (7 ரன்) விக்கெட்டை, இஷாந்த் சர்மா சாய்க்க, ஆஸ்திரேலிய அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 137 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற் றது.
இந்திய அணியின் இந்த வெற்றியை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதில் சில;
Very convincing win from ?? congratulations. For ?? @patcummins30 was the standout ?
— Michael Clarke (@MClarke23) December 30, 2018
And that's a wrap on Melbourne! What a rollercoaster of a game it has been. Games like these bring out the true beauty of test cricket. Thank you all for your wishes. Ending 2018 with this lovely memory. On to the final one now! #AUSvIND pic.twitter.com/durwAO5HmC
— cheteshwar pujara (@cheteshwar1) December 30, 2018
This is the second time that India have retained the Border-Gavaskar trophy while Australia have been able to do it only once so far.#AUSvIND
— Umang Pabari (@UPStatsman) December 30, 2018
If you're a 90s kid and have moist eyes right now, I can empathize. #AUSvIND
— Dr. Ripper (@ItsARipper) December 30, 2018
India's four Test away wins in 2018
v South Africa, Johannesburg
v England, Trent Bridge
v Australia, Adelaide
v Australia, MelbourneAnd Cheteshwar Pujara scored 50-plus runs in each of the four Tests.#AUSvIND
— Umang Pabari (@UPStatsman) December 30, 2018
1977-78 was the last time India won 2 tests in a tour of Australia
Almost 41 years down the line,this team has done it again
Hoping this becomes our first series victory now,and we are only a toss away from it now
The year ends on a big big positive#AUSvIND— Devesh (@GiveItGiggsehhh) December 30, 2018
While AUS fans can bemoan the standard of the current team there is no mistaking that this is a wonderful IND side … terrifically well-balanced with clear match winners in both the batting and bowling departments … world number one with good reason #AUSvIND ?
— Glenn Mitchell (@MitchellGlenn) December 30, 2018
Top stuff ?? 2-1 up in the series #AUSvIND test series well done @Jaspritbumrah93 @cheteshwar1 @imVkohli proud of you guys.. make it 3-1 congratulations…Team india @BCCI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 30, 2018
Well done India! A very good win #INDvAUS @BCCI ????
— Anjum Chopra (@chopraanjum) December 30, 2018
37 years 10 months ago was the last time India won a test at the MCG, none of the players from either sides were born. This win is one to savour & cherish for a long time and a perfect end to 2018 for Team India. Each player can be very proud of their contribution to this win?
— VVS Laxman (@VVSLaxman281) December 30, 2018