ADELAIDE, AUSTRALIA - DECEMBER 07: Virat Kohli of India celebrates getting the wicket of Pat Cummins of Australia during day two of the First Test match in the series between Australia and India at Adelaide Oval on December 07, 2018 in Adelaide, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)க்

கோலி போல் கொண்டாடினால் உலகம் எங்களை மோசக்காரன் என்று சொல்லும் என ஆஸி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு உற்சாகமூட்டும் விதமாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது:

இப்போதைய நிலவரப்படி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்ல எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. நாளை (4ம் நாள்) ஆஸ்திரேலியா முதல் 2 மணி நேர ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினால்தான் ஆட்டத்தில் நிற்க முடியும். இல்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா 0-1 என்று தோல்வியுடன் தான் செல்ல முடியும்.

கோலி போல் கொண்டாடினால் உலகம் எங்களை மோசக்காரன் என்று சொல்லும்.. ஆஸி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வருத்தம்! 1

இவ்வாறு சச்சின் இட்ட ட்வீட்ட்டை ஆயிரக்கணக்கானோர் மறு ட்வீட் செய்ய, 8,000த்துக்கும் மேலான லைக்குகள் அள்ளியுள்ளது

அஸ்வின், முகமது ஷமி ஆகியோரின் நெருக்கடி தரும் பந்துவீச்சில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது.

அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

இன்னும் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படும் நிலையில் நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது, கையில் 6 விக்கெட்டுகளை வைத்துள்ள ஆஸ்திரேலிய அணி. மார்ஷ் 31 ரன்களுடனும், ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி வருவதால், அஸ்வினின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இன்று திக்குமுக்காடுவதைக் காண முடிந்தது. வழக்கமான சுழற்பந்துவீச்சைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கும், கணிக்க முடியாத அஸ்வினின் சுழற்பந்துவீச்சை ஆஸி. பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

கோலி போல் கொண்டாடினால் உலகம் எங்களை மோசக்காரன் என்று சொல்லும்.. ஆஸி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வருத்தம்! 2

அஸ்வினின் பந்துவீச்சு ஒருபுறம் நெருக்கடி தர, மற்றொரு திசையில் பும்ரா, இசாந்த் சர்மா, ஷமி ஆகியோர் தங்களின் துல்லியத் தன்மை தவறாமல், லைன் லென்த்தில் பந்துவீசினார்கள். இதனால், 323 ரன்கள் இலக்கை துரத்திச் செல்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு பகீரதப் பிரயத்தனமாக இருந்து வருகிறது.

அடிலெய்ட் மைதானத்தில் இதுவரை 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்தது 117 ஆண்டுகளில் இல்லை. கடைசியாக, 1902-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 315 ரன்களை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து சேஸிங் செய்ததே அதிகபட்சமாகும். அதன்பின் எந்த அணியும் இங்கு வந்து 4-வது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தது இல்லை. ஒருவேளை இந்த இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப் பிடித்தால், 117 ஆண்டுகளில் சாதனையாக இருக்கும்.

அதேசமயம், இந்திய அணி இதுவரை தனது ஆஸ்திரேலியப் பயணத்தில் முதல் டெஸ்ட்டை வென்றது இல்லை. ஒருவேளை இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இதுவரை 11 முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் மோதிய இந்திய அணி 9 முறை முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றுள்ளது.கோலி போல் கொண்டாடினால் உலகம் எங்களை மோசக்காரன் என்று சொல்லும்.. ஆஸி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வருத்தம்! 3

ஆனால், தற்போதுள்ள சூழலில் மார்ஷ், ஹெட் தவிர்த்து விக்கெட் கீப்பர் பைனே, லயான் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன் என்று சொல்ல முடியும். கடைசி வரிசை பேட்ஸ்மேன்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரை அஸ்வின் நிற்கவைத்துப் படம் காட்டி விடுவார். ஆதலால், நாளை காலை இரு ‘செஷன்களில்’ இந்திய வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளைக் கழற்றிவிட்டால் அடிலெய்ட் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்கே என்பதை மறுக்க முடியாது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *