இவனுகள நம்பி வாய விட்டது என் தப்பு தான்; மைக்கெல் வாகன்
ஆஸ்திரேலிய அணியை நம்பி அவசரப்பட்டு வாயை விட்டுவிடதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தால், சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. இதற்கு பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மரண அடி கொடுத்து தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதிய மூன்றாவது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக்கொண்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை நம்பி அவசரப்பட்டு வாயை விட்டுவிடதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,‘என் கணிப்பு தவறாகிவிட்டது. இந்திய வீரர்கள், மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா, பும்ராவின் ஆட்டம் சிறப்பானது. ஆஸ்திரேலிய ‘பேட்டிங்’ படு மோசமாகவுள்ளது.’ என்றார்.
Final thought as I leave Aussie … Australia will Win the series … Lyon is going to prove to be the difference … #AUSvIND … Anyway back to the cold … See you all down under in early jan @FoxCricket
— Michael Vaughan (@MichaelVaughan) December 20, 2018
முன்னதாக வாகன், டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லும் என கணித்திருந்தார். இந்நிலையில் தன் கணிப்பு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக காத்திருக்கும் சாதனை;
மெல்போர்னில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்டடெஸ்ட் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறுவதற்கு பெரும்பாலான இந்தியவீரர்களின் டாப் கிளாஸ் வேகப்பந்துவீச்சு, அனுபவமான பேட்டிங் காரணம் என்றுமுன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். சிட்னியில் அடுத்து நடைபெறும்டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்துவிட்டால் அல்லது வென்றுவிட்டால் கடந்த 70ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனைபடைக்கும்.