இந்திய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் இன்று துவங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
Australia have opted to bowl first in the T20I opener!
— ICC (@ICC) December 4, 2020
?? D'Arcy Short is set to open for Australia alongside Aaron Finch!
?? T Natarajan is now set to make his T20I debut ?#AUSvINDpic.twitter.com/fM1CmrujhZ
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் வாசிங்டன் சுந்தருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதே வேளையில் பும்ராஹ், மாயன்க் அகர்வால் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை, அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி;
ஷிகர் தவான், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி (கேப்டன்), சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், தீபக் சாஹர், முகமது ஷமி, நடராஜன்.
முதல் டி.20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;
டி. ஆர்கி ஷார்ட், ஆரோன் பின்ச் (கேப்டன்), மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மிட்ச் ஸ்வீப்சன், சியன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜாஸ் ஹசில்வுட்.