இது போதுமே.. பெண் ரசிகர்களை கவர; இணையத்தை கலக்கும் சிஎஸ்கே வீரரின் வீடியோ! 1

ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்து சுமார் இரண்டு மாத காலம் நடைபெறும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய போட்டிகளில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்ற இந்திய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர். அதில் இருந்தபடியே பயிற்சியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் வீரர்கள் மிகவும் இறுக்கமான மனநிலையில் இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்திருக்கிறது. இதிலிருந்து அவர்கள் வெளிவர சமூக வலைதளங்களின் மூலமாகவும் இன்னும் சில செயல்களையும் செய்து தங்களை தயார் செய்கின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரில் டி20 அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சஹர் தனது புது திறமையை வெளிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த படத்தின் பாடல் ஒன்றை கிட்டாரில் வாசித்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இது தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பதிவில் “பயிற்சிக்கு முன்னரான மனநிலை” என அவர் குறிப்பிட்டும் இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் தீபக் சஹர் 14 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவர் தொடர்ந்து இந்திய அணிக்கும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 10 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் இந்தியாவின் மிகச்சிறந்த டி20 பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *