இதை செய்தால் ஸ்டீவ் ஸ்மித்தை அசால்டாக அவுட்டாக்கலாம்; டிப்ஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் !! 1

ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவனாக திகழும் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான சில நுனுக்கங்களை இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெ வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை செய்தால் ஸ்டீவ் ஸ்மித்தை அசால்டாக அவுட்டாக்கலாம்; டிப்ஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் !! 2

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெ வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் வீரர்களுக்கு தங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களையும் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை இலகுவாக வீழ்த்துவதற்கான சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.

இதை செய்தால் ஸ்டீவ் ஸ்மித்தை அசால்டாக அவுட்டாக்கலாம்; டிப்ஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் !! 3

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், “ ஸ்மித் வித்தியாசமான பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே, அதாவது 4வது ஸ்டம்ப் லைனில் வீசவேண்டும் என்போம். ஆனால்ன் ஸ்மித் நகர்ந்துகொண்டே இருப்பதால், அவருக்கு அந்த லைனில் வீசக்கூடாது. அதைவிட நான்கு அல்லது ஐந்து இன்ச்சுகள் விலக்கியே வீச வேண்டும். அவருக்கு ஆஃப் திசையில் கூடுதலாக நகர்த்தியே வீச வேண்டும். இதற்கு மனரீதியான அட்ஜெஸ்ட்மெண்ட் தான் முக்கியம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *