விராட் கோலியின் இடத்தை நிரப்ப இரண்டு வீரர்களை கைகாட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் !
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய தொடர்களில் விளையாடப் போகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை எளிதாக கைப்பற்றியது. இதனை அடுத்து ஏற்கனவே சோகத்தில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு டி20 தொடர் முடிவடைந்தவுடன் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்தியாவின் தூணாக இருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்குத் திரும்பி விடுவார்.
விராட் கோலிடயின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். பிரசவ காலத்தில் அவருடன் இருப்பதற்காக இந்தியாவுக்கு திரும்புகிறார் விராட் கோலி. இதற்கு யு.ஜி.சி அனுமதி அளித்துவிட்டது. இந்நிலையில் விராட் கோலி இல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு கேப்டனாக ஒரு பேட்ஸ்மேனாக அவர் இல்லாவிட்டால் அணியின் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு விடும். ஆனால் அவர் இல்லாத குறையைப் போக்க போவது யார் ? அந்த இடத்தை நிரப்பப் போகும் பேட்ஸ்மேன் யார் ? என ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை விராட் கோலி இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி விட்டால் பல ஆண்டுகாலத்திற்கு இந்த வெற்றியை கொண்டாடலாமா அதுபோன்ற ஒரு வெற்றி உண்மையான வெற்றி ஆக இருக்கும். இந்திய வீரர்களை எடுத்துக்கொண்டால் கே.ல் ராகுல் மிகச்சிறந்த வீரர் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்னால் விளையாடி சதம் அடித்திருக்கிறார். அவரால் மிகச் சிறப்பாக விளையாட முடியும் ஆனால் விராட் கோலி இடத்தை நிரப்ப முடியுமா என்பது சந்தேகம்தான்.

அதே நேரத்தில் ரஹானேவும் சிறந்த வீரர் தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிறப்பாக செயல்பட்டால் ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க முடியும். இந்திய வீரர்கள் விராட் கோலி இல்லாத நேரத்திலும் நம்பிக்கையுடன் தொடரை அணுகவேண்டும். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய அணிக்கு திறமை இருக்கிறது என்பதே உண்மை” இவ்வாறு கூறியிருக்கிறார் மைக்கேல் கிளார்க்.