Cricket, India, Virender Sehwag, Virat Kohli

சேவாக் அவரது அதிரடிக்கு பெயர் போனவர் துவக்க ஆட்டக்காரராக அவர் அடிக்கும் முதல் பந்து ஃபோருக்காக அவரது ரசிகர்கள் தவமாய் தவமிருப்பார்கள். அது ஒரு ஆக்ரோசமான அனுகுமுறை தான்.

அவர் உய்வு பெற்ற பின்னும் பேட்டிங்கில் இல்லாமல் ட்விட்டரிலும் தனது ஆக்ரோசமான நகைச்சுவை அனுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார்.

இதனால் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் 'பம்முகிறார்கள்' : சேவாக் 1 சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கன் இந்த அதிரடி மன்னனிடம் ட்விட்டரில் மாட்ட அவரை தனது பதிவுகளால் மைதானத்திற்கு வெளியே தூக்கி அடித்தது நியாபகம் இருக்கும்.

தற்போது அதே போன்று வேறொரு தைரியமான பேட்டியுடன் வந்துள்ளார் சேவாக். சில தினங்களுக்கு முன்னர் தான் நடந்து முடிந்தது இந்தியா-ஆஸ்திரேலியத் தொடர்.

இதனால் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் 'பம்முகிறார்கள்' : சேவாக் 2

இந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளை இந்தியாவும் 1 போட்டியை ஆஸ்திரேலியாவும் வெல்ல, இந்தியா தொடரைக் கைப்பற்றியது. ஆனால், கிரிக்கெட் போட்டி என்றாலே ஆஸ்திரேலியர்கள் எதிரணியினரை வசை பாடுதலும் வம்புழுப்பதும் வழக்கம்.

ஆனால், இந்த 5 போட்டிகளில் ஒருமுறை கூட ஆஸ்திரேலிய வீரர்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடாததை நாம் கண்கூட பார்த்தோம். மேத்யூ வேட் மட்டும் விராட் கோலியிடம் அடிபட்டபோது எப்பபடி ரன் ஓடுவீர்கள் என புலம்பிக் கொண்டிருந்தார்.

மற்றபடி எந்த ஒரு சர்ச்சைப் பேச்சும் இல்லை வசைபாடுதலும் இல்லை. இங்கு தான் சேவாக் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

டீவி நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

அடுத்த வருடம் ஐ.பி.எல் தொடருக்காக மிகப்பெரிய ஏலம் விடப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியினரிடம் வம்பிழுத்தால் அந்த வாய்ப்பு பரிபோய்விடுமோ என்று பயப்படுகின்றனர். இதனால் தான் இந்த தொடரில் அவர்களுக்கே உரித்தான அந்த பணியில் ஈடுபடவில்லை.

எனக் கூறினார் சேவாக்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *