அக்‌ஷர் பட்டேலால் இந்த சாதனையை அசால்டாக செய்ய முடியும்; சோயிப் அக்தர் நம்பிக்கை !! 1

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியை மிரளவிட்ட அக்‌ஷர் பட்டேல், அதி விரைவாக 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பிடிப்பார் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

வீழ்த்தவே முடியாது என கருதப்பட்ட இங்கிலாந்து அணியை, இந்திய அணி அசால்டாக வீழ்த்தியதற்கு அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இதில் குறிப்பாக இந்த தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்த அக்‌ஷர் பட்டேல், தனது முதல் தொடரிலேயே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் மூன்று போட்டிகளில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அக்‌ஷர் பட்டேலால் இந்த சாதனையை அசால்டாக செய்ய முடியும்; சோயிப் அக்தர் நம்பிக்கை !! 2

அறிமுக டெஸ்ட்டிலேயே 7 விக்கெட்டை வீழ்த்திய அக்ஸர் படேல், அடுத்த டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகளையும், கடைசி டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை(27) வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார் அக்ஸர் படேல்.

அக்‌ஷர் பட்டேலால் இந்த சாதனையை அசால்டாக செய்ய முடியும்; சோயிப் அக்தர் நம்பிக்கை !! 3

இந்நிலையில், அக்ஸர் படேல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், அக்ஸர் படேல் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் விக்கெட்டுகளை வாரி குவிக்கவில்லை. உண்மையாகவே அவர் புத்திக்கூர்மையான பவுலர். அவரது கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தவரையில், இங்கிலாந்து வீரர்களை சிறப்பாக ஆட அனுமதிக்கவேயில்லை அக்ஸர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை போல இன்னும் ஒருசில தொடர்கள் அமைந்தாலே, அதிவேக 100 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை படைத்துவிடுவார் அக்ஸர் படேல் என்று சோயிப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *