நியூஸிலாந்து தொடரின் சம்பளத்தில் அக்சர் பட்டேல் என்ன வாங்கியுள்ளார்?

குஜராத் மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக அக்சர் பட்டேல், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர் முடிந்த பிறகு தனக்காக லன்ட்ராவர் டிஸ்கவரை வாங்கியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அனைவரும் இப்படி தான் வாழவேண்டும் என்று கனவு கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்த்து வருதிரார்கள் இந்திய அணியின் நட்சத்திர வீரார்கள் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மா. பொதுவாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு விலை மதிப்புமிக்க கார் வாங்குவது தான் பழக்கமாக வைத்துள்ளார்கள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சேமிப்புகளை பார்த்தால் அனைவருமே அசந்து போவார்கள். பெர்ரரி 599 ஜீடிஓ, ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா, கவாசகி நிஞ்ஜா எச்2, கான்பிடெர்ரட் எக்ஸ்132 ஹெலிகாட், டுகாட்டி 1098, ஹார்லே டேவிட்சன் என அனைத்து கார், பைக்குகளை வைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

கார் கலெக்சன் செய்வதில் தோனிக்கும் மேல் ஒருவர், அவர் தான் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். பிஎம்டபுள்யூ & மெர்சிடிஸ், நிசான் GTR என விதவிதமான கார் வைத்து கொண்டிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். பிஎம்டபுள்யூ-வை சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தால், ஆடி கார்களை சேமித்து வைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்த இந்திய வீரர்களுக்கு பிறகு குஜராத் மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக அக்சர் பட்டேல், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர் முடிந்த பிறகு தனக்காக லன்ட்ராவர் டிஸ்கவரை வாங்கியுள்ளார்.

அந்த காரின் விலை ரூபாய் 40 லட்சத்தில் இருந்து ரூபாய் 53 லட்சம் வரை உள்ளது. அவரது புதிய கார் லன்ட்ராவர் டிஸ்கவரை வாங்கிய பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டார் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல். கருப்பு நிற காருக்கு முன்பு பூச்செண்டுடன் நின்று போட்டோ எடுத்து கொண்டார் அக்சர் பட்டேல்.

சிறிது நாளுக்கு முன்பு இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தில் இருப்பதை பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்ததற்கு, தக்க பதிலடி கொடுத்தார் அக்சர் பட்டேல். அதாவது, அவர் இந்திய அணிக்காக விளையாடும் போது அவரது வேலையை செய்வார், இது போன்ற தேவையற்றது என்னை எந்த வகையிலும் பாதிக்காது என அக்சர் பட்டேல் பதிலளித்து இருந்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.