பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் பிடித்த இங்கிலாந்து அணி பட்டையை கிளப்பி 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை.
273 ரன்களுக்கு தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி 272 பந்துகளுக்கு 141 ரன்கள் குவித்தார். இதில் 21 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள் என்ற எல்லையைக் கடந்து உள்ளார் அசார் அலி.

இதனை செய்த 6ஆவது வீரராக இவர் இருக்கிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளர் யூனிஸ்கான் இருக்கிறார். இவர் 10099 ரன்களை அடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஜாவித் மியான்தத் 8230 ரன்களுடனும் இன்சமாம் உல் ஹக் 8230 ரன்களுடனும் முகமது யூசுப் 7530 ரன்களுடனும் இருக்கின்றனர். மேலும், இதே பட்டியலில் யூனிஸ் கான் மற்றும் அசார் அலி ஆகிய இருவர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அசார் அலி 141 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதையடுத்து 310 ரன்கள் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி நாளை தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.
இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி 310 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.