நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி பேய் ஓவலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 122 ரன்களும், ஹென்ரி நிக்கோலஸ் 75 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி, தனது முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வங்கதேச அணியின் கேப்டன் மூமினுல் 88 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக எபாடட் ஹூசைன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை ருசித்தது.