அடேங்கப்பா... 546 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி; உலக சாதனை படைத்தது வங்கதேச கிரிக்கெட் அணி !! 1
அடேங்கப்பா… 546 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி; உலக சாதனை படைத்தது வங்கதேச கிரிக்கெட் அணி

ஆஃப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி 546 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் இரு அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்றது. கடந்த 14ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அடேங்கப்பா... 546 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி; உலக சாதனை படைத்தது வங்கதேச கிரிக்கெட் அணி !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, தனது முதல் இன்னிங்ஸில் 382 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக சாண்டோ 146 ரன்களும், மெஹ்தி ஹசன் 48 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 146 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் உள்பட யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்கவில்லை.

இதனையடுத்து 236 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்துவிட்டு டிக்ளேர் செய்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாண்டோ 124 ரன்களும், மூமினுல் 121* ரன்களும் எடுத்தனர்.

அடேங்கப்பா... 546 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி; உலக சாதனை படைத்தது வங்கதேச கிரிக்கெட் அணி !! 3

இதன்பின் 665 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸை போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சொதப்பியது. ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் வெறும் 115 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி, 546 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

ஆஃப்கானிஸ்தான் அணியுடனான இந்த டெஸ்ட் போட்டியில் 546 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம், வங்கதேச அணி டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் மூன்றாவது அணியாக  இடம்பெற்றுள்ளது.

அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்; 

ஆஸ்திரேலியா vs  இங்கிலாந்து – 675 ரன்கள் – 1928ம் ஆண்டு

ஆஸ்திரேலியா vs  இங்கிலாந்து – 562 ரன்கள் – 1934ம் ஆண்டு

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் – 546 ரன்கள் – 2023ம் ஆண்டு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *