இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதமடித்த 6 வீரர்கள்!! 1

கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பது என்பது அபாரமான விஷயமாகும் இது அனைவராலும் எளிதாக செய்து விட முடியாது. ஒரு அணியில் அதிகமான வீரர்கள் சதம் அடித்தால் அந்த அணி நிச்சயம் வெற்றி பெறும் என்பது உறுதி. அந்த அளவுக்கு சதம் என்பது கிரிக்கெட் போட்டியில் மிக முக்கியமான ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக பலமான அணிக்கு எதிராக சதம் அடிப்பது என்பது லேசான காரியமில்லை. இருந்தபோதும் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர்களைப் பற்றி இங்கு பார்ப்போம்..

இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதமடித்த 6 வீரர்கள்!! 2

மஹேல ஜெயவர்தன (இலங்கை) -10

இலங்கைஅணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மஹேல ஜெயவர்தன இந்தியாவுக்கு எதிராக தனது கிரிக்கெட் கரியரில் இதுவரை 10 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.

1997 முதல் 2014 வரை இலங்கை அணிக்காக விளையாடிய மஹேல ஜெயவர்தனே இந்தியாவுக்கு எதிராக இதுவரை 110 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

அதில் இவர் இந்தியாவுக்கு எதிராக ஆறுமுறை டெஸ்ட் தொடரில் 4 முறை ஒரு நாள் தொடரில் சதம் அடித்துள்ளார். 2019 அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவர் இந்தியாவுக்கு எதிராக 275 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

சனத் ஜெயசூரியா (இலங்கை) -10 ..

இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதமடித்த 6 வீரர்கள்!! 3

இலங்கை அணியின் இடதுகை ஜாம்பவானான சனத் ஜெயசூர்யா இந்தியாவுக்கு எதிராக மொத்தம் 10 சர்வதேச சதங்களை அடித்துள்ளார் இவர் இந்தியாவுக்கு எதிராக 3927 அடித்துள்ளார்.

1990 முதல் 2010 வரை இலங்கை அணிக்காக ஆடிய சனத் ஜெயசூர்யாவின் அவரேஜ் 40.07. இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் 7 சதங்கலும் 3 முறை டெஸ்டிலும் சதம் அடித்து உள்ளார்.

குமார் சங்கக்கார இலங்கை -11 ..

இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதமடித்த 6 வீரர்கள்!! 4

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்ககாரா இலங்கை அணியில் ஆடும் காலங்களில் மிக முக்கியமான வீரராகத் திகழ்ந்தார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சங்கக்காரா இந்தியாவுக்கு எதிராக 11 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். மேலும் 23 அரை சதங்களும் அடித்துள்ளார் 2000 முதல் 2015 வரை இலங்கை அணிக்காக விளையாடிய சங்கக்காரா 97 சர்வதேச போட்டிகளில் 4287ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய அவரேஜ் 44. 19 ஆகும் . இவர் அடித்த 11 சதங்களில் ஒருநாள் போட்டியில் 6 சதமும் டெஸ்ட் போட்டியில் 5 சதங்களும் அடங்கும்.

சர் விவி ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)- 11.

இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதமடித்த 6 வீரர்கள்!! 5

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவனான ரிச்சர்ட்ஸ் இந்தியாவுக்கு எதிராக 11 சதங்களை அடித்துள்ளார். இவர் மொத்தம் 59 சர்வதேச போட்டியில் பங்கேற்று 2924 ரன்களை எடுத்துள்ளார்.

1974 முதல் 1989 வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய ரிசர்ச். அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார் அவரைச் 49.5 ஆகும்.இந்தியாவுக்கு எதிராக அடித்த 11 சதங்கங்களில் 8 சதங்கள் டெஸ்ட் போட்டியிலும் 3 சதங்கள் ஒருநாள் போட்டியில் ஆடித்ததாகும்.

ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)- 12

இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதமடித்த 6 வீரர்கள்!! 6

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதங்கள் அடித்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இவர் இந்தியாவுக்கு எதிராக 37 சர்வதேச போட்டியில் பங்கேற்று 2658 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய ஆவரேஜ் 66.45 மேலும் இந்தியாவுக்கு எதிராக 12 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இவர் அடித்த 11 சதங்களின் 7 டெஸ்ட் போட்டியிலும் 5 ஒருநாள் போட்டியில் அடித்ததாகும்.

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)-14.

இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதமடித்த 6 வீரர்கள்!! 7

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங் இந்தியாவுக்கு எதிராக அதிகமான சதங்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

இவர் இந்தியாவுக்கு எதிராக 14 சர்வதேச போட்டிகளில் சதம் அடித்துள்ளார் 88 போட்டிகளில் பங்கேற்று 4,795 அடித்துள்ளார்.

1995 முதல் 2012 வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி மிக முக்கிய வீரராக திகழ்ந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 14 சர்வதேச சதங்களும் 22 அரை சதங்களும் அடித்துள்ளார். இவர் அடித்த 14 சங்கங்களில் 8 டெஸ்ட் போட்டியிலும் 6 ஒருநாள் போட்டியிலும் அடித்ததாகவும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *