டி20 போட்டி என்றாலே வெட்டு ஒன்று துண்டு என்ற வாக்கில் தான் ஆட்டம் இருக்கும். இந்த மாதிரியான போட்டியில் அதிரடிக்கு பஞ்சமே இருக்காது. நடப்பு களங்களில் மக்களும் இதை தான் விரும்புகிறார்கள்.
இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் டி20 போட்டிகள் வளர்ந்து வருவதால் ஒரு வீரரின் முழு திறமையை நிருபிக்க கூடிய டெஸ்ட் போட்டிகள் அழிந்து வருவதாகவும், மக்கள் பொறுமையாக பார்க்க விரும்புவதில்லை, மைதானங்களில் கூட்டம் சேருவதில்லை அதனால் கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் போட்டிகளை நடத்த தயங்குகின்றனர் எனவும் குற்றங்கள் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வீரர்கள் அதை பொருட்படுத்தாமல் தங்களது திறமைகளை நிரூபிக்க டெஸ்ட் போட்டிகள் மட்டுமே தேவை என இல்லை,டி20 போட்டிகளே போதும் என சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது டி20 போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களின் பட்டியலை தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம்.
9. கிறிஸ் கெயில் – 2
அதிரடிக்கு பெயர் போன கிறிஸ் கெயில், பேட்டிங் செய்கிறார் என்றால் பந்து வீச்சாளர்களுக்கு கதி கலங்கும். உள்ளூர் டி20 தொடர்களில் அதிக சதங்கள் விளாசி இருந்தாலும் சர்வதேச டி20 தொடரில் இதுவரை இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.