அந்த விஷயத்தை தோனி போன்று வேறு எவரும் செய்தது இல்லை என்று பெருமிதமாக பேசியுள்ளார் இளம் வீரர் ரியான் பராக்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிர்காலமாக பார்க்கப்படும் 21 வயதே ஆன ரியான் பராக் கடந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இறுதிப்போட்டி வரை சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துரதிஷ்டவசமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
17 இன்னிங்ஸ் விளையாடி 183 ரன்கள் அடித்திருந்த ரியான் பராக் ஒரு அரைசதத்தையும் அடித்திருந்தார். 202-21 ஆம் ஆண்டுகளிலும் இவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகள் விளையாடி 86 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதற்கு அடுத்த வருடம் 11 போட்டிகளில் 93 ரன்கள் அடித்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவரை ஏன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து தக்க வைத்து வருகிறது என்று பல கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தன.
இதற்கு ரியான் பராக் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது: “2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் தொடர் இரண்டிலும் நான் மிகப்பெரிய சரிவை சந்தித்தேன். அப்போது எனக்கு நானே நிறைய பேசிக்கொண்டேன். மேலும் சங்ககாரா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரிடமும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தார்கள் அவர்கள் கூறியதும் எனக்கு நம்பிக்கையை தரவில்லை.
வெளியில் பலரும் பலவிதமாக பேசுவார்கள் எழுதுவார்கள். அதற்கு செவிசாய்க்காமல் முயற்சியை செய்யவேண்டும் என நினைத்தேன். மேலும் எனக்குள் நானே பேசிக்கொண்டு தயாராக வேண்டும். அதுதான் எனது எதிர்காலத்திற்க சரியாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டேன்.”
மேலும், “பேட்டிங் வரிசையில் ஆறாவது அல்லது ஏழாவது வீரராக களமிறங்கி விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை விளையாடும் போது உணர்ந்தேன். குறிப்பாக டி20 போட்டிகளில் அது மிகவும் கடினமானது. இதனை பல வருடங்களாக தோனி மிகச் சிறப்பாக செய்து, அதில் ஜாம்பவானாக மாறி இருக்கிறார்.
அப்படியொரு பொறுப்பை ஏற்று நான் அதை இளம் வயதில் செய்து வருகிறேன் என நினைக்கும் பொழுது பெருமிதமாக இருக்கிறது. இளம் வயதிலேயே மிகப்பெரிய பொறுப்பை அணி நிர்வாகம் என்னை நம்பி கொடுக்கிறது என எண்ணும்போது இன்னும் பெருமிதமாக உள்ளது. இனி வரும் போட்டிகளில் நான் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கிடைக்கும் நேரங்களில் தோனியிடம் இருந்து நான் ஆலோசனைகளை பெற்றுக் கொள்கிறேன்.” என்று பேசினார்.