இந்தியா வர மறுக்கும் முக்கிய வீரர்கள்; கடுப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் !! 1

இந்தியா வர மறுக்கும் முக்கிய வீரர்கள்; கடுப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவதாக மிரட்டிய வீரர்களுக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு உடன்பாடு ஏற்பட்டாலும் ஷாகிப் அல் ஹசன் உட்பட சில வீரர்கள் தொடருக்கு வருவது உறுதியாகவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக வீரர்கள் ஸ்ட்ரைக்கைத் தலைமையேற்று நடத்தி, தனியார் செல்போன் நிறுவனத்துடன் சொந்த விளம்பர ஒப்பந்தத்தையும் இடையில் சாமர்த்தியமாகப் போட்டுக் கொண்ட ஷாகிப் அல் ஹசன் 1 நாள் தவிர மற்ற 2 நாட்கள் அணியின் பயிற்சிக்குத் திரும்பவில்லை.

இந்தியா வர மறுக்கும் முக்கிய வீரர்கள்; கடுப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் !! 2

இந்நிலையில் வங்கதேச நாளிதழான புரோதோம் ஆலோ என்ற ஊடகத்துக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிச்சயம் வீரர்கள் பயணிக்க மாட்டார்கள், எங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் எங்களுக்கு தெரிவிக்க மட்டுமே செய்வார்கள். எனக்கும் தெரியவில்லை, ஷாகிபை இன்று அழைத்துள்ளேன். அவர் என்ன கூறுவார் என்று பார்ப்போம், மற்ற வீரர்கள் பற்றியும் தெரியவில்லை. ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்களின் படி அவர்களும் இந்தியத் தொடருக்குச் செல்ல மாட்டார்கள்.

இந்தியா வர மறுக்கும் முக்கிய வீரர்கள்; கடுப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் !! 3

அக்டோபர் 30ம் தேதியன்று நாங்கள் போகமாட்டோம் என்று கூறினால் எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அணி மொத்தத்தையும் மாற்ற வேண்டும். நான் கேப்டனுக்கு எங்கு செல்வேன்? நான் அவர்களுடன் என்னதான் செய்ய முடியும் நீங்களே கூறுங்கள்” என்று பதற்றத்துடன் புலம்பியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *