ஐபிஎல் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அனைவரும் விளையாடுவது சகஜமாகிவிட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் உலக அளவில் நடக்கும் அனைத்து டி20 தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் வருகிற ஜூலை 22ம் தேதி துவங்க உள்ள 100 டோர்னமெண்ட்டில் இங்கிலாந்தில் விளையாட இருக்கிறார்கள். அந்த தொடரை புதிதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் துவங்க இருக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் 100 பந்துகள் வீதம் போட்டி விளையாடப்படும். ஆண்களுக்கு என தனி தொடர் அதேபோல பெண்களுக்கு தனி தொடர் என கோலாகலமாக இந்த தொடர் ஆரம்பமாக உள்ளது. ஜூலை 22ஆம் தேதியை துவங்கப்பட்டு ஆகஸ்ட் 21ம் தேதி இந்த தொடர் முடிவுக்கு வரும்.

இதனைத்தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு மீண்டும் சென்று அங்கே கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இருக்கிறார்கள். தற்பொழுது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் சற்று முன் கூட்டியே முடிக்கச் சொல்லி பிசிசிஐ மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்வாகமும் தற்பொழுது சம்மதம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடருக்காக முன்கூட்டியே கரீபியன் லீக் தொடர் முடிக்க திட்டம்
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டபடி கரீபியன் லீக் தொடர் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் 19-ஆம் தேதி முடிப்பதாக இருந்தது. ஆனால் பிசிசிஐ ஐபிஎல் தொடரை செப்டம்பர் 18 அல்லது 19ஆம் தேதி துவங்க ஏற்கனவே தீர்மானித்து விட்டது. இதனால் கரீபியன் லீக் தொடர் சற்று முன்கூட்டியே முடித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று பிசிசிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிசிசிஐ வேண்டுகோளை ஏற்று தற்பொழுது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் போர்டு கரீபியன் லீக் தொடரை ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கப்பட்டு செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க இருக்கிறது. எனவே மீதமுள்ள மூன்று நாட்களில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் வந்து பங்கேற்க போதுமானதாக இருக்கும்.
பயோ பபுள் குறித்து விளக்கமளித்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம்
ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற உள்ள 100 தொடர் விளையாடுவதற்கு முன்பாகவே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் படுவார்கள். எனவே அவர்கள் அங்கிருந்து மேற்கிந்திய தீவக்கு வந்து அங்குள்ள பயோ பபுளில் பாதுகாப்பாக விளையாட முடியும். அதேபோலவே அங்கு பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்து மெரிட் கரீபியன் லீக் தொடர் முடித்தவுடன், நேரடியாக ஐபிஎல் தொடர் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவார்கள்.

அங்கே சென்று அங்கே உள்ள பயோ பபுளில் இணைந்து மீண்டும் பாதுகாப்பாக விளையாட இது அவர்களுக்கு சரியாக இருக்கும். எனவே வீரர்கள் ஒரு முறை தனிமைப்படுத்தப்பட்டு விட்டாலே போதும். அதற்குப் பிறகு ஒரு பயோ பபுளில் இருந்து இன்னொரு பயோ பபுளிலுக்கு செல்லலாம் என்கிற அடிப்படையில் இது விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது.
ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.