இந்த சாம்பியன்ஸ் டிராபி முடிவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் புது பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவிக்கும். இதற்கு முன்பு வந்த தகவலின் படி, சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு தான் புது பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமிக்கும் என தகவல் வந்தது. ஆனால், தற்போது சாம்பியன்ஸ் டிராபி முடிவதற்கு முன்பே பயிற்சியாளர் யார் என்று பிசிசிஐ அறிவிக்கும் என தகவல் வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி முடிந்து 5 நாளில் வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் செய்வதால், சில நாட்களுக்கு முன்பாகவே இந்திய அணியுடன் பயிற்சியாளர் இணைவார் என்பதற்காக இந்த முடிவு பிசிசிஐ எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசனை குழு விண்ணப்பதாரர்களை பேட்டி எடுத்து, அடுத்த பயிற்சியாளர் யார் என்று அறிவிப்பார்கள்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 6 பேர் விண்ணப்பித்துள்ளனர் – விரேந்தர் சேவாக், டோடா கணேஷ், லால்சந்த் ராஜ்புட், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், கிரேக் மெக்டெர்மோட்.
சிறிது நாளுக்கு முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே மற்றும் கேப்டன் விராட் கோலிக்கும் மோதல் என தகவல் வந்துள்ளது. ஆனால், அதை போல் எதுவும் இல்லை விராட் கோலி உறுதி படுத்தினார்.
அணில் கும்ப்ளே, ஜூன் 23 2016 அன்று இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றார். இந்த சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும், அவருடைய ஒருவருட பயிற்சியாளர் பதவி முடிவுக்கு வருகிறது.
இதில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு சேவாக் நெருக்கடி கொடுப்பார் என தெரிகிறது. ஏனென்றால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே சேவாகிடம் விண்ணப்பிக்க கேட்டுள்ளார் என தகவல் வந்துள்ளது. ஆனால், அவர் இரண்டே வரியில் விண்ணப்பத்தை அனுப்பியுள்ளதால், அவரை மறுபடியும் விண்ணப்பத்தை அனுப்ப பிசிசிஐ கூறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்த 5 நாளில் வெஸ்ட் இண்டீஸ் பயணம் தொடர்கிறது. புது பயிற்சியாளர் தலைமையில் இந்தியா விளையாடும் முதல் தொடர் அதுதான்.