2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு! சொந்த மைதானத்தில் எந்த அணியும் விளையாட முடியாத புதிய திட்டம்! 1

14வது ஐபிஎல் தொடர் போட்டிகள் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக இந்தியாவில் ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது

முதல் போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற போகிறது இதில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன வழக்கமாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் முதல் போட்டியில் மோதும் அதுவும் தங்களது சொந்த மைதானத்தில் தான் விளையாடும் ஆனால் சம்பந்தமே இல்லாமல் சென்னை மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு! சொந்த மைதானத்தில் எந்த அணியும் விளையாட முடியாத புதிய திட்டம்! 2

வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக 8 மைதானத்திற்கு பதில் 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது 56 போட்டிகளும் இந்த ஆறு மைதானத்தில் மட்டுமே நடைபெறும் சென்னை மும்பை டெல்லி கொல்கத்தா அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த அனைத்து போட்டிகளும் நடத்தி முடிக்கப்படும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய மைதானங்களில் 10 போட்டிகளில் அகமதாபாத் டெல்லி ஆகிய மைதானங்களில் 8 போட்டிகளும் நடைபெற போகிறது இதன் காரணமாக எந்த அணியும் தனது சொந்த மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது

56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு! சொந்த மைதானத்தில் எந்த அணியும் விளையாட முடியாத புதிய திட்டம்! 3

சென்னை சூப்பர் கிங்ஸுக்கான முழு அட்டவணை:

 தேதிநேரம்இடம்அணிகள்
1. ஏப்ரல் 10இரவு 7.30 மும்பைசென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேபிடல்ஸ்
2. ஏப்ரல் 16இரவு 7.30மும்பைபஞ்சாப் கிங்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்
3. ஏப்ரல் 19இரவு 7.30மும்பைசென்னை சூப்பர் கிங்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்
4. ஏப்ரல் 21இரவு 7.30மும்பைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்
5. ஏப்ரல் 25பிற்பகல் 3.30மும்பைசென்னை சூப்பர் கிங்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
6. ஏப்ரல் 28இரவு 7.30தில்லிசென்னை சூப்பர் கிங்ஸ்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
7. மே 1இரவு 7.30தில்லிமும்பை இந்தியன்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்
8. மே 5இரவு 7.30தில்லிராஜஸ்தான் ராயல்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்
9. மே 7இரவு 7.30தில்லிசன்ரைசர்ஸ் ஹைதராபாத்சென்னை சூப்பர் கிங்ஸ்
10. மே 9பிற்பகல் 3.30பெங்களூருசென்னை சூப்பர் கிங்ஸ்பஞ்சாப் கிங்ஸ்
11. மே 12இரவு 7.30பெங்களூருசென்னை சூப்பர் கிங்ஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
12. மே 16இரவு 7.30பெங்களூருசென்னை சூப்பர் கிங்ஸ்மும்பை இந்தியன்ஸ்
13. மே 21இரவு 7.30கொல்கத்தாடெல்லி கேபிடல்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்
14. மே 23இரவு 7.30கொல்கத்தாராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருசென்னை சூப்பர் கிங்ஸ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *