இந்திய அணியின் துணை பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் நியமனம் !! 1

இந்திய அணியின் துணை பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் நியமனம்

இந்திய கிர்க்கெட் அணியின் புதிய துணை பீல்டிங் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நுவன் சீனிவராத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்திய அணியின் துணை பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் நியமனம் !! 2

இதில் டி.20 தொடரை மட்டும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்தடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் படுமோசமாக இழந்தது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி மீது கடுமையான விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்திய இங்கிலாந்து மண்ணில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணியால் ஆசிய கோப்பை மற்றும் அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய அணியின் துணை பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் நியமனம் !! 3
BIRMINGHAM, ENGLAND – AUGUST 03: England batsman Dawid Malan reacts after he is caught at slip by Ajinkya Rahane (r) during day 3 of the First Specsavers Test Match at Edgbaston on August 3, 2018 in Birmingham, England. (Photo by Stu Forster/Getty Images)

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியை வலுப்படுத்தும் முயற்சியில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது, இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய துணை பீல்டிங் பயிற்சியாளராக நுவன் சீனிவராத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவன் சீனிவராத்னே இதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்திய அணியின் துணை பீல்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *