ஒரு காலத்தில் ஒரு சராசரியான கிரிக்கெட் வாரியமாக இருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தற்போது ஐ.பி.எல் தொடரின் தாக்கம் ஏற்ப்பட்டு உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கிறதி பி.சி.சி.ஐ.
ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களுக்கு சரியாக ஊதியம் கூட கொடுக்க முடியாமல் அவதிப்படும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சிக்கே பணம் கொடுக்கும் அளவிற்கு கொழித்து வளந்திருக்கிறது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கு விமானத்தில் பயணிக்கும் பொழுது அவர்களுக்கு எகனாமி கிளாஸ் டிக்கெட் வழங்கப்படுகிறது. 

இதனால் வீரர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும், உடன் பயணிக்கும் சக பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொள்ளக்கூறி அன்பு தொல்லைகள் கொடுப்பதாகவும், ஒரு சில வீரர்கள் உயரமாக இருப்பதால் கால்களை நகர்த்தி அமர்வதில் பிரச்சினைகள் இருப்பதாகவும் கிரிக்கெட் வாரிய உயர்மட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவிடம் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் போது கோரிக்கை வைத்தார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விமான பயணத்தின் போது பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வழங்க பிசிசிஐ நிர்வாகக்குழு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு மட்டுமே பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அனைத்து வீரர்களும் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்ய முடியும்.
ஆனால், கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் வேறு யோசனை வழ்னகி வருகிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளின் கோல்ஃப் மற்றும் சில விளையாட்டின் வீரர்கள் தங்கள் வசதிக்கேற்ப தனி விமானம் வைத்து உபயோகித்து வருகின்றனர். இதனால் விராட் கோலி மற்றும் தோனி போன்ற வீரர்கள் ஒரு தனி ஜெட் விமான தங்களுக்கு தனிப்பட்ட முறையில் வாங்கி வைத்துக்கொள்ளாம் என ஆலோசனை கூறி வருகின்றனர்.

அப்படி வாங்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏதும் வராது. மேலும் வீரர்களின் நேரம் மிச்சமாக்கப்படும், அதே போல் நீண்ட நேர பயணத்தின் போது வீரர்களுக்கு ஏற்ப்டும் களைப்பும் குறையும். இந்திய கிரிக்கெட் வீர்ரகள் தனி விமானம் வாங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை, கூடிய சீக்கிரம் அது நடந்துவிடும் எனக் கூறினார் கபில் தேவ்.